பானுக்க ராசபக்ச

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பானுக்க ராசபக்ச (Bhanuka Rajapaksa, பிறப்பு: 24 அக்டோபர் 1991), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒருநாள், மற்றும் இருபது20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடுகிறார். இடக்கை மட்டையாளரான இவர் வலக்கை நடுத்தர-வேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] கொழும்பில் பிறந்த இவர், முதல்தரப் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளின் பின்னரே பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார். முதலில் 2019 பாக்கித்தானுக்கெதிரான இ20ப பன்னாட்டுப் போட்டித் தொடரில் இலங்கை அணியில் விளையாடினார். 2021 சூலையில், இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் அனுமதி இன்று ஊடங்களுக்கு நேர்காணல்கள் வழங்கியமைக்காக ஓராண்டுக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாட இவருக்கு இடைநிறுத்திய தடை விதிக்கப்பட்டது.[2][3][4]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads