பார்வதம்மா ராஜ்குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்வதம்மா ராஜ்குமார் (Parvathamma Rajkumar; 6 டிசம்பர் 1939 - 31 மே 2017) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிப்பாளர் ஆவார். இவர் மூத்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி ஆவார் . அவர் "பூர்ணிமா எண்டர்பிரைசஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ராஜ்குமார் மற்றும் அவர்களின் மகன்கள் சிவ ராஜ்குமார், புனீத் ராச்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் நடித்த படங்களைத் தயாரித்தார். மாலாஸ்ரீ, பிரேமா, ரக்சிதா, சுதாராணி மற்றும் ரம்யா ஆகியோர் அவரது தயாரிப்புகளில் புகழ் பெற்ற நடிகைகள் ஆவர்.[1][2][3] பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[4]
இவர் பெற்ற விருதுகளில் தாதாசாகெப் பால்கே அகாதமி விருது, கன்னட ராஜ்யோத்சவா மற்றும் கர்நாடக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவை அடங்கும்.[1][5] 2012 ஆம் ஆண்டுவரை, இவர் 80 படங்களைத் தயாரித்தார். கன்னடர்களைப் பாதுகாக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகள் மற்றும் கன்னடத் திரைப்படத் துறையின் படைப்புகளை மீறுவதற்கு எதிராக கர்நாடகாவின் நிலைப்பாடு குறித்து இவர் பேசியுள்ளார்.[6][7][8][9][10][11][12]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
முன்னாள் மைசூர் இராச்சியத்தின் மைசூர் மாவட்டத்தின் சாலிகிராமத்தில் பார்வதிமா 6 டிசம்பர் 1939 அன்று அப்பாஜி கவுடா மற்றும் லட்சுமம்மாவுக்கு எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது வருங்கால மாமனார் சிங்கநல்லூர் புட்டசவமையா ஒரு தொட்டிலில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து இவரை மருமகளாக ஆக்குவதாக சபதம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்: மகன்கள் சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனீத் ராச்குமார், மற்றும் மகள்கள் லட்சுமி மற்றும் பூர்ணிமா ஆவர். இவரது கணவர் ராஜ்குமார் 12 ஏப்ரல் 2006 அன்று மாரடைப்பால் இறந்தார்.[13]
பார்வதிமா உடல்நலக் குறைவிற்கான சிகிச்சை அளிக்க 14 மே 2017 அன்று எம். எஸ். ராமையா நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 17 மே இல் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். மருத்துவ முயற்சிகளுக்குப் பிறகு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தது. இவருக்கு டிரக்கியோடோமி சிகிச்சை அளிக்கப்பட்டது[14] 4:30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கல்லீரல் செயலிழந்ததால் 4.40 மணிக்கு இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.[15]
Remove ads
திரைப்பட வாழ்க்கை
இவர் ஸ்ரீ வஜ்ரேஷ்வரி கம்பைன்ஸ் அல்லது பூர்ணிமா எண்டர்பிரைசஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இவர் தயாரித்த திரிமூர்த்தி என்ற முதல் படத்தில் தனது கணவருடன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[3] இவரது சகோதரர்கள் எஸ். ஏ. சின்னே கௌடா, எஸ். ஏ. கோவிந்தராஜ் மற்றும் எஸ். ஏ. சீனிவாசு ஆகியோரும் திரைப்படத் தயாரிப்பாளர்களாக இருந்தனர்.[16][17]
இவர் 80 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும், இவரது மூன்று மகன்களை திரைப்பட நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். திரிமூர்த்தி, ஹாலு ஜெனு, காவிரத்னா காளிதாஸா மற்றும் ஜீவனா சைத்ரா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தனது கணவருடன் இணைந்து நடித்துள்ளர். ஆனந்த், ஓம், ஜானுமடா ஜோடி மற்றும் பல திரைப்படங்களை தனது மூத்த மகன் சிவ ராஜ்குமார் நடித்த படங்களையும் தயாரித்தார். இவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் சிரஞ்சீவி சுதாகர், நஞ்சுண்டி கல்யாண, ஸ்வஸ்திக் மற்றும் துவ்வி துவி துவி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவளது இளைய மகன் புனித் அப்பு, அபி மற்றும் ஹடுகரு ஆகிய படங்களில் நடித்தார் .[1][18][19]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads