பாலக்காடு நகர தொடருந்து நிலையம்
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலக்காடு நகர தொடருந்து நிலையம் (Palakkad Town railway station) (நிலைய குறியீடு: PGTN) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின் பாலக்காடு, நகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம், பாலக்காடு நகர தொடருந்து நிலையம் ஆகிய இரண்டு தொடருந்து நிலையங்களும் பாலக்காடு நகரத்தின் போக்குவரத்திற்கு சேவை செய்கின்றன.[2]
Remove ads
பாதைகள்
(மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு சந்திப்பு- பாலக்காடு டவுன்[3][4][5]
(மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு நகரம்–பொள்ளாச்சி சந்திப்பு.[3]
அண்மைய வளர்ச்சி
பிட்லைன் எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்குள் மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது நகரத்தில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் ஒரு முக்கிய தொடருந்து மையமாக மாறும்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads