பாலம்பூர் இமாச்சல் தொடருந்து நிலையம்

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாலம்பூர் இமாச்சல் தொடருந்து நிலையம் (Palampur Himachal railway station) என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையமாகும். காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வேயில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாலம்பூர் இமாச்சல் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 1,119 மீட்டர் (3,671 அடி) உயரத்தில் உள்ளது. இது பெரோசுபூர் தொடருந்து பிரிவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பி.எல்.எம்.எக்சு என்ற இரயில்வே குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. 610 மிமீ (2 அடி) அகலமுள்ள குறுகிய பாதை 1929 ஆம் ஆண்டில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.[1] 1929 ஆம் ஆண்டில் இந்த பாதை 762 மிமீ (2 அடி 6 அங்குலம்) அகலமுள்ள குறுகிய பாதையாக மறுசீரமைக்கப்பட்டது.[2][3]

விரைவான உண்மைகள் பாலம்பூர் இமாச்சல் தொடருந்து நிலையம்Palampur Himachal Railway Stationपालमपुर हिमाचल रेलवे स्टेशन, பொது தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads