பி. எஸ். என். ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. எஸ். என். ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ஆங்கிலம்:PSNA College of Engineering & Technology) என்பது திண்டுக்கல் மாவட்டம் கோதண்டராமன் நகரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியாகும். இது 1994 ஆம் ஆண்டு ஆர். எஸ். கோதண்டராமன் என்பவரால் தொடங்கப்பட்டு, ஸ்ரீ ரங்கலெட்சுமி கல்வி அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் ஏ++ மற்றும் சிஜிபிஏ மதிப்பில் 3.65 புள்ளிகளும் பெற்றுள்ளது.[1] இக்கல்லூரி திண்டுக்கல் அருகே உள்ள முத்தானம்பட்டியிலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) மைல் தூரத்தில், தேசிய நெடுங்சாலையில் அருகே 45 எக்டர் பரப்பளவில் உள்ளது. பச்சேரி நல்லதங்காள் அம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பதே பி.எஸ்.என்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னாட்சி பெறாத சுமார் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இக்கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.[2]
Remove ads
படிப்புகள்
இளநிலைப் பொறியியல் படிப்புகள்
- இயந்திரப் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- கட்டடப் பொறியியல்
- கணினி அறிவியல் & பொறியியல்
- மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- உயிர் மருத்துவப் பொறியியல்
- செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்
முதுநிலைப் பொறியியல் படிப்புகள்
- கணினி அறிவியல் & பொறியியல்
- மின்னணு மற்றும் இயக்கிகள்
- கணினி மற்றும் தொடர்பியல்
- வடிவவியல் பொறியியல்
- முதுகலை வணிக நிர்வாகவியல்
- முதுகலை கணினிப் பயன்பாட்டியல்
Remove ads
விருதுகள்
2007 ஆம் ஆண்டு பாரதிய வித்யா பவன் தேசிய விருதினை இந்திய சமுகத் தொழில்நுட்பக் கல்விக்குழு பெற்றது.[3] இந்தியத் தரநிர்ணய அமைவனம் இக்கல்வி நிறுவனத்துடன் தரநிர்ணய செயல்பாட்டில் பங்கேற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads