பினாங்கு நகராட்சி பூங்கா

From Wikipedia, the free encyclopedia

பினாங்கு நகராட்சி பூங்காmap
Remove ads

பினாங்கு நகராட்சி பூங்கா (மலாய்: Taman Bandaraya; ஆங்கிலம்: Penang City Park அல்லது (Youth Park); என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் நகருக்குள் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும்.

விரைவான உண்மைகள் பினாங்கு நகராட்சி பூங்கா, வகை ...

பினாங்கு தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள பினாங்கு நகராட்சி பூங்கா, 1972-ஆம் ஆண்டில் ஒரு பொழுதுபோக்கு பகுதியாகவும், நகரவாசிகளுக்கு பசுமையான இயற்கை வனமாகவும் திறக்கப்பட்டது.. [1]

Remove ads

பொது

அதன் பெயருக்கு ஏற்ப, விளையாட்டு மைதானங்கள், ஸ்கேட்டிங் ரிங்க்ஸ், நீச்சல் குளங்கள், சுவரெழுத்து இடங்கள், மெல்லிய கற்பாதைகள் மற்றும் வெளிப்புற அரங்கங்கள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. [2] [3] [4] இந்த பூங்கா பினாங்கு தீவு மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு

Thumb
பொது நீச்சல் குளம்

1970-ஆம் ஆண்டுக்ளில் பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதிகளில் சிறார் குற்றங்கள் பெருகி வந்தன. பொழுதுபோக்கு பகுதிகள் இல்லாததால் குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டது. அந்த வேளையில் இளையோர் பூங்கா (Youth Park) அமைப்பதற்கான திட்டம் உருவானது.[5]]

அத்துடன், இப்போது சிட்டி பார்க் என்று அழைக்கப்படும் பகுதியில் கைவிடப்பட்ட 40 ஏக்கர் (16 எக்டேர்) கருங்கல் சுரங்கம் இருந்தது. 'இளைஞர் பூங்கா' அமைப்பதற்கான முன்மொழிவை அப்போதைய பினாங்கின் முதலமைச்சராக இருந்த லிம் சோங் யூ ஏற்றுக்கொண்டார். இந்தக் கருத்தை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது; மற்றும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓர் அடிக்கல் நாட்டு விழாவும் தொடங்கப்பட்டது.

Remove ads

திறப்பு விழா

1969-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு, பினாங்கின் பன்முக கலாசார பாரம்பரியத்தை இந்த பூங்கா உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக, பினாங்கில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் இளைஞர்க் கழகங்களில் இருந்து தன்னார்வத் தொண்டர்கள் அடிக்கல் நாட்டு நிகழ்வுக்கு வரவழைக்கப்பட்டனர்.

அந்தக் கட்டத்தில் இளையோர் பூங்கா என அறியப்பட்ட பினாங்கு நகராட்சி பூங்கா, 1972-ஆம் ஆண்டு அப்போதைய பினாங்கு ஆளுநர் சையத் அசன் பராக்பாவால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads