பினாங்கு தீவு மாநகராட்சி

பினாங்கு ஜார்ஜ் டவுன் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia

பினாங்கு தீவு மாநகராட்சி
Remove ads

பினாங்கு தீவு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Pulau Pinang; ஆங்கிலம்: City Council of Penang Island); (சுருக்கம்: MBPP) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். அத்துடன் பினாங்கு தீவை முழுமையாக இந்த மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது.[1]

விரைவான உண்மைகள் பினாங்கு தீவு மாநகராட்சிCity Council of Penang IslandMajlis Bandaraya Pulau Pinang 槟岛市政厅, வகை ...

மலேசியாவின் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் பினாங்கு தீவு மாநகராட்சி உள்ளது. இந்த மாநகராட்சியின் அதிகார வரம்பு 306 சதுர கி.மீ. (118 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இந்த நகராட்சிக்கு 1957 சனவரி 1-ஆம் தேதி மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.[2][3]

Remove ads

பொது

பினாங்கு தீவு மாநகராட்சியின் முதல்வர் (Mayor); மற்றும் அதன் 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் பினாங்கு மாநில அரசாங்கம் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கிறது. மேற்சொன்ன பினாங்கு தீவு மாநகராட்சியின் பொறுப்புகள் அனைத்தும் நியமனப் பொறுப்புகளாகும்.

மலேசியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த பினாங்கு தீவு மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; பினாங்கு தீவு நகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது.[4]

இலவச சிற்றிடைப் பேருந்து சேவை

அத்துடன் இந்த மாநகராட்சி, ரேபிட் பினாங்கு (Rapid Penang) எனும் பினாங்கு விரைவுப் பேருந்து நிறுவனத்துடன் இணைந்து, ஜார்ஜ் டவுன் மையப் பகுதிக்குள் இலவச சிற்றிடைப் பேருந்து சேவையை (Free Shuttle Bus Service) நடத்தி வருகிறது.

இந்த மாநகராட்சியின் தலைமையகம் ஜார்ஜ் டவுன் மாநகரில் அமைந்துள்ளது. இந்த பினாங்கு தீவு மாநகராட்சி 1976-ஆம் ஆண்டு வரை ஜோர்ஜ் டவுன் நகராட்சி மன்றம் (George Town City Council) எனச் செயல்பட்டது. ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு தீவில் உள்ள மிக உயரமான கட்டிடமான கொம்டார் (Komtar) கோபுரத்திலும் இந்தப் பினாங்கு தீவு மாநகராட்சிக்கு அலுவலகங்கள் உள்ளன.

Remove ads

வரலாறு

1800-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுனுக்காக ஒரு மதிப்பீட்டாளர் குழு (Committee of Assessors) நிறுவப்பட்டது. அதுவே பிரித்தானிய மலாயாவில் நிறுவப்பட்ட முதல் உள்ளூராட்சி மதிப்பீட்டாளர் குழுவாக அமைந்தது.

அந்தக் குழு, பிரித்தானிய மற்றும் உள்ளூர் ஆசியப் பணியாளர்களைக் கொண்டு இயங்கியது. பினாங்கு ஜார்ஜ் டவுன், புதிய குடியேற்றத்திற்குள் இருந்த அசையும் சொத்துக்கள்; அசையா சொத்துக்களை மதிப்பிடுவது அந்தக் குழுவின் பணியாகும்.

பிரித்தானிய மலாயாவில் முதல் உள்ளூராட்சி அமைப்பு

1857-இல், ஜார்ஜ் டவுன் நகராட்சி மன்றம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அது ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதன் தலைவர் பினாங்கின் பிரித்தானிய ஆளுநர் (Resident-Councillor of Penang). நகராட்சி மன்றத்தின் உறுப்பினர்களில் மூன்று பேர் வரி செலுத்தும் வெளிநாட்டவர் (Expatriate Ratepayers); மற்றவர்கள் மலாக்கா நீரிணை பகுதிகளைச் சேர்ந்த குடிமக்கள் (Straits-born British Citizens).

இந்த ஜார்ஜ் டவுன் நகராட்சி மன்றம்தான் பிரித்தானிய மலாயாவில் முதல் உள்ளூராட்சி அமைப்பாகும். இருப்பினும், ஜார்ஜ் டவுன் நகராட்சி மன்றத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் 1913-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன.

மலாயாவின் முதல் நகராட்சி தேர்தல்

1951-ஆம் ஆண்டில், பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் ஜார்ஜ் டவுனுக்கான பதினைந்து முனிசிபல் உறுப்பினர்களில் ஒன்பது பேருக்கான நகராட்சித் தேர்தல்களை மீண்டும் அறிமுகப் படுத்தினர். இதுவே மலாயாவின் முதல் நகராட்சி தேர்தலாகும்.

நகராட்சித் தேர்தலுக்காக, ஜார்ஜ் டவுன் மூன்று வார்டுகளாகப் (Wards) பிரிக்கப்பட்டது. தஞ்சோங் (Tanjung); கெலவே (Kelawei); மற்றும் ஜெலுத்தோங் (Jelutong). 1956-ஆம் ஆண்டு வாக்கில், உள்ளூர் அரசாங்கத்தைக் கொண்ட மலாயாவின் முதல் நகராட்சியாக ஜார்ஜ் டவுன் நகராட்சி மன்றம் சாதனை படைத்தது.

Remove ads

ஜார்ஜ் டவுன் வரலாறு

Thumb
பினாங்கு தீவு மாநகராட்சி கட்டடம்

1770-களில், தூர கிழக்கு நாடுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி (East India Company); வணிகத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அக்கட்டத்தில் தீபகற்ப மலேசியாவிலும் வர்த்தக உறவுகளை உருவாக்க அந்த நிறுவனம், பிரித்தானிய அரசக் கடற்படைத் தலைவரான (British Royal Navy Captain) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரை கெடாவிற்கு அனுப்பி வைத்தது.

பினாங்கு ஒரு புதிய பிரித்தானியத் துறைமுகமாக அமைவதற்கு பொருத்தமானது என்று கண்டறிந்த பிரித்தானியர்கள், பினாங்கில் ஒரு தளத்தை நிறுவுவதற்கு திட்டம் வகுத்தார்கள். அந்த வகையில் கெடாவின் சுல்தான் முகரம் ஷாவிடம் (Sultan Mukarram Shah) ஒப்புதலைப் பெற பிரான்சிஸ் லைட்டை கெடாவிற்கு அனுப்பினார்கள்.

மேலதிகத் தகவல்கள் வரலாற்று இணைப்புகள், காலம் ...

கெடாவிற்கு தற்காப்பு உதவிகள்

Thumb
அந்தி சாயும் நேரத்தில் பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன்

கெடா சுல்தானிடம் இருந்து பினாங்கைப் பெற்றுக் கொள்வதில் பிரான்சிஸ் லைட் வெற்றி பெற்றார். அதற்குப் பதிலாக, கெடா இராணுவத்திற்கு தற்காப்பு உதவியின் அடிப்படையில் பிரித்தானியர்கள் உதவுவார்கள் என்றும் உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி உதவி செய்யவில்லை.

பினாங்கு தீவு, தொடக்கத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1786, ஆகஸ்ட் 11-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பில் பிரான்சிஸ் லைட் பினாங்கில் காலடி வைத்த போது, அதற்கு ஐக்கிய இராச்சியத்தின், நான்காம் ஜார்ஜ் நினைவாக "வேல்ஸ் இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார்.

பிரான்சிஸ் லைட்

Thumb
1786-இல் கட்டப்பட்ட கார்ன்வாலிசு கோட்டை

அந்த வகையில், ஜார்ஜ் டவுன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரால் 1 ஆகஸ்ட் 1786-இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் நகரின் வடக்கு கிழக்கு மூலையில் கார்ன்வாலிசு கோட்டை (Fort Cornwallis) கட்டப்பட்டது. பின்னர் அது வளர்ந்து வரும் ஒரு வணிக நகராக மாறியது.

சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிகளுடன் சேர்ந்து, ஜார்ஜ் டவுன் நிலப்பகுதி நீரிணை குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாற்றம் கண்டது. 1867-ஆம் ஆண்டில் பிரித்தானிய முடியாட்சியில் (British Crown Colony) ஒரு காலனியாக மாறியது.

மலேசியாவின் முதல் மாநகரம்

இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது.

ஜார்ஜ் டவுன் மாநகராட்சி முதல்வர்கள்

மேலதிகத் தகவல்கள் #, முதல்வர்களின் பெயர் ...

பினாங்கு தீவு மாநகராட்சி முதல்வர்கள்

மேலதிகத் தகவல்கள் #, முதல்வர்களின் பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads