பினாங்கு மேரியட் அடுக்ககம்
பினாங்கு அடுக்குமாடி வீட்டுத்தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு மேரியட் அடுக்ககம் (ஆங்கிலம்: Marriott Residences Penang) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரின் கடற்கரைக்கரையில் உள்ள அடுக்ககம் ஆகும்.[1]
இந்த ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் முக்கிய சாலையான கெர்னி டிரைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி வீட்டுத்தொகுதி 223 மீட்டர் (732 அடி) உயரம் கொண்டது.
இந்த அடுக்குமாடி மனைகள், 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட இரண்டாவது உயரமான அடுக்ககம் ஆகும்.
Remove ads
பொது
உள்ளூர் மேம்பாட்டு நிறுவனமான பிஎஸ்ஜி நிறுவனம் கட்டிய இந்த |அடுக்ககம் 55 மாடிகளைக் கொண்டது. 2023-இல் முழுமையாக உருவாக்கப்பட்டு 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[2]
தென்கிழக்கு ஆசியாவில் மேரியட் இன்டர்நேசனல் நிறுவனத்தின் அடுக்குமாடி மனைக் குடியிருப்புகளில் இந்தக் குடியிருப்பே முதல் இடம் வகிக்கிறது. பினாங்கின் விலையுயர்ந்த அடுக்குமாடி மனைக் குடியிருப்புகள் பிரிவில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது.
இந்த வானளாவிய கட்டிடத்தில் 223 அடுக்குமாடி மனைகள், 90 தங்கும் விடுதி அறைகள் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட 302 அடுக்குமாடி மனைகள் உள்ளன.[2]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads