பிரசாந்த் நீல்
இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரசாந்த் நீல் (Prashanth Neel) (பிறப்பு 4 ஜூன் 1980) பிரசாந்த் நீலகண்டபுரம் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் மற்றும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணிபுரியும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான உக்ரம் மூலம் அறிமுகமானார். பின்னர் இரண்டு பாகங்கள் கொண்ட கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று (2022) என்ற திரைப்படங்களை இயக்கினார்: இது அதிக வசூல் செய்த கன்னடத் திரைப்படப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் சாலார்: பகுதி 1 – சீஸ்ஃபையர் (2023), என்ற தெலுங்கு படத்தை இயக்கினார்.
Remove ads
சொந்த வாழ்க்கை
பிரசாந்த் நீலகண்டபுரம் [1] 4 ஜூன் 1980 [2] அன்று கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் சுபாஷ் மற்றும் பாரதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த பிறந்தார். இவர்களின் குடும்பம் ஆந்திராவின் மடகாசிராவுக்கு அருகிலுள்ள நீலகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் பெங்களூரில் குடியேறினர்[3][4] நீல் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக பேசுகிறார்.
நீல் 2010 இல் இலிகிதா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.[5] நீலின் சகோதரி கன்னட நடிகர் ஸ்ரீமுரளியை மணந்தார். முரளி நீலின் அறிமுக இயக்குமான உக்ரம் படத்தில் நடித்தார்.[6] நீல் தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா மற்றும் ஆந்திராவின் முன்னாள் மாநில அமைச்சர் இரகு வீரா ரெட்டி ஆகியோரின் உறவினர் ஆவார்.[7][8]
Remove ads
தொழில் வாழ்க்கை
திரைப்பட இயக்கத்தில் படிப்பை தொடர்ந்து தான் எழுதிய ஆ ஹுதுகி நீனே என்ற திரைக்கதையில் தனது மைத்துனரும் நடிகருமான ஸ்ரீமுரளியைக் கொண்டு இயக்க முடிவு செய்தார். முரளியின் ஆர்வமின்மைக் காரணமாக உக்ரம் என்ற அதிரடித் திரைப்படத்தின் திட்டத்துடன் வந்தார்.[9] இந்த படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. மேலும், 2014 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த கன்னடப் படங்களில் ஒன்றானது.[10]
பின்னர் 2018இல் வெளியான ஒரு கன்னட மொழி வரலாற்று நாடகம் மற்றும் அதிரடித் திரைப்படமான கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று [11][12].[13] படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார்.
பின்னர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாலார்: பகுதி 1 – சீஸ்ஃபையர் (2023), என்ற தெலுங்குப் படம் வெளியானது.[14][15][16]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads