பிரம்மரிஷி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மரிசி என்பது ரிசிகளின் தவவலிமைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தபட்டமாகும். இத்தகைய பட்டம் பெற்றவர்கள் மற்ற ரிசிகளில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார் என்கிறது இந்து தொன்மவியல் நூல்கள்.
ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை மகரிஷி என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை பிரம்மரிஷி என்பர். வேதங்களின் படி எவர் ஒருவர் பிரம்மஞானம் பெற்றவராக கருதப்படுகிராரோ, அவரே பிரம்மரிஷி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார். இதுவரை பிருகு, அத்திரி, அங்கரிசர் , காச்யபர், விசுவாமித்ரர், வசிஷ்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே. பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். இதில் விசுவாமித்ரர் மட்டும் சத்ரிய குலத்தில் தோன்றி தன் தவ வலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். பிரம்மரிஷிகளுக்கு தேவர்களுக்கு நிகரான சக்தி இருப்பதாகவும் வேதங்கள் கூறுகின்றன.
Remove ads
பழமொழி
- வசிட்டர் வாயால் பிரம்மரிசி பட்டம்
ரிஷிகள்
ரிஷிகள் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற பல துறைகளிலும் முன்னோடிகளாக இருந்து வந்ததை பல நூல்கள் குறிப்பிடுகின்றன. "ஊர்வசி பஞ்சரத்னம்" எனும் நூல் தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிஷிகள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகின்றது.[1]
இவற்றையும் காண்க
ஆதாரங்கள் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads