பிரம்மஹத்தி தோசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மஹத்தி தோசம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் கொலைப்பாவமாகும்.[1] ஒருவர் அரக்கரையோ, தேவரையோ, மனிதரையோ கொல்லும் பொழுது அவருக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றுவதாக இந்து சமய புராணங்களும், நூல்களும் தெரிவிக்கின்றன. பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை அடைகின்றன. அவ்வாறன்றி எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.[2]
- சிவனின் உருவமான பைரவர் - பிரம்மனின் ஐந்தாவது தலையை வெட்டியமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
- சப்தகன்னியர் - மகிடாசூரன் என்னும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[3]
- விஷ்ணுவின் அவதாரமான இராமர் - இராவணன் என்னும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[4][5]
- வீரசேனன், வரகுண பாண்டியன் - இரு பிராமணர்களை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[6]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads