சப்தகன்னியர்

இந்து தாய்தெய்வங்கள் From Wikipedia, the free encyclopedia

சப்தகன்னியர்
Remove ads

இந்து சமயத்தில் சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் (Matrikas அல்லது Saptamatrikas) எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் ஆதிசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் எனவும் அறியப்படுகிறார்கள்.

Thumb
சப்தகன்னியர் சிற்பம், தேசிய அருங்காட்சியகம், புது டில்லி
Thumb
சப்தகன்னியர் சிலை, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டி அருங் காட்சியகம்
Thumb
இடப்புறம் சிவன், வலப்புறம் பிள்ளையார் நடுவில் சப்தகன்னியர்
Thumb
கச்சிராயபாளையத்தில் சாம்பாரப்பன் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் சிலைகள்

தங்கள் குலதெய்வம் யாதென்று அறியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Remove ads

சப்த கன்னியரின் தோற்றம்

சிவன் அந்தகாசூரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்தார். அப்பொழுது அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிபடுகின்ற இரத்தத்திலிருந்து அசுரர்கள் தோன்றினார்கள். அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்கினியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார். யோகேசுவரி மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேசுவரிக்கு துணையாக பிரம்மா பிராம்மியை தோன்றுவித்தார். விஷ்ணு வைஷ்ணவியை தோற்றுவித்தார். இந்திரன் இந்திராணியையும், முருகன் கௌமாரியையும், வராக அவதாரம் வராகியையும், சண்டி சாமுண்டியையும் தோன்றுவித்தனர் மற்றும் அவர்கள் அந்தகசூரனை அழித்தனர்.

சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் மற்றும் அவர்களை அழித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. காளிதாசனின் குமாரசம்பவம் என்ற காவியத்தில் சப்த கன்னியர் சிவனின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது.[1]

சப்தகன்னியரின் தோற்றத்தினைப் பற்றி மற்றொரு புராணக் கதையில் மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென வரம் பெற்றிருந்தார். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசுரனால் துன்பமைடைந்தனர். அனைவரும் சென்று சிவனிடம் தங்களை காத்தருள வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருள வேண்டினார் சிவன். அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்த கன்னியர்களை தோன்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப்பட்டதால் சப்த கன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது. அதனை நீக்க வேண்டி சப்தகன்னியர் சிவனை வேண்டினர்.

சிவன் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படி கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார்.[2]

Remove ads

சப்த கன்னிகள்

பிராம்மி

பிராம்மி என்பவர் பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார்.[3]

மகேசுவரி

மகேசுவரி என்பவர் சிவனின் அம்சமாவார். இவர் சிவனைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.[4]

கௌமாரி

கௌமாரி என்பவர் முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல் கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்.[5]

வைஷ்ணவி

வைஷ்ணவி என்பவர் விஷ்ணுவின் அம்சமாவார். இவருக்கு நாராயணி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறார்.[6]

வராகி

Thumb
வராகி சிற்பம்

வராகி விஷ்ணுவின் வராக அவதாரத்தின் அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், நான்கு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்திராணி

இந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களை கொண்ட இவர், பின் இரு கரங்களில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து வெண் யானை வாகனத்தில் அமர்ந்திருப்பவர்.[7]

சாமுண்டி

சாமுண்டி என்பவர் சண்டியின் அம்சமாவார். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழித்த அவதாரம் ஆவர்.[8]

Remove ads

கோயில்களில் சப்த கன்னியர்

சோழர் காலத்திய கோயில்கள் மற்றும் அதற்கு முந்தையகால கோயில்களிலும் சப்தமாதர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் சப்தமாதர் வழிபாடு அருகிவிட்டது. சப்தமாதர் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்ததற்குச் சிற்ப, ஓவிய, செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் மட்டுமே இருந்தது.[9]

  • திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தேதியூர், கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் என்ற திருநாமத்தில் சாமுண்டி அருள்பாளித்து வருகிறாள். இங்கு ஏழு பேரும் ஒரே சன்னதியில் அருள்பாளித்து வருகின்றனர்.
  • தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை வட்டம் வேம்பநல்லூர் கிராமத்தில் சப்த கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது.
  • அரைக்கோணம் அருகேயுள்ள திருமால்புரம் ஒட்டிய பாலூர் கிராமத்தில் சப்த மாதர் திருவராகி அம்மன் கோவிலில் ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெறுகின்றது.
  • திருவாரூர் அருகில், காரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆயுதம் காத்த அம்மன் திருகோவில் உள்ளது. ஶ்ரீ ஆயுதம் காத்த அம்மன் சாமுண்டி அவதாரமாய் அருள்பாலித்து வருகிறாள். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்திற்காகச் சென்றபோது அவர்களின் ஆயுதங்களைப் பாதுகாத்ததால் ஶ்ரீ ஆயுதம் காத்த அம்மன் என்று பெயர் பெற்றாள்.
  • கிருட்டிணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் சப்தமாதர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தேனி மாவட்டம், எல்லப்பட்டி செக்டேம் கரையில் 100 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரே கல்லிலான ஏழு கன்னிமார் திருவுருவத்திலான தனிக் கோவில் உள்ளது.
  • அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆயுதகளம் தெற்கு கிராமத்தில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் சப்த கன்னிகளை 100 வருடங்களுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர்.
  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழமணக்குடி கிராமத்தில் ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கப்பட்டு வருகிறது.
  • ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டில் சப்தகன்னியர் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.
  • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கெட்டிச்செவியூரில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் உள்ளது.
  • சேலம் அம்மாப்பேட்டை காளி கோயிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் அமைந்துள்ளது.[10]
  • சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு அருகில் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் ஒரே கல்லில் சப்த கன்னியர் சிலையை காணலாம்.
  • திருச்சி உறையூர் சாலை ரோடில் பாளையம் பஜாரில் சப்தமாதருக்கு சிற்றாலயம் உள்ளது.
  • திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் கிராமத்தில் சப்த கன்னிகையர் கோவில் உள்ளது.
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது.
  • கரூர் மாவட்டம் கிரீன் லேண்டில் (பெரிய குளத்துபாளையம் மற்றும் சின்ன குளத்துபாளையம்) கன்னிமார் சிற்றாலயம் அமைத்துள்ளது.
  • தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் ஏரிக்கரையில் சப்த கன்னிமார் திருக்கோவில் அமைந்துள்ளது.
  • திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் அமைத்துள்ள அயித்தாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பிடாரி இளையாண்டி அம்மன் கோவிலில் சமுண்டீஸ்வரி அம்மன் இளையாண்டி அம்மனாகவும் மற்ற ஆறு கண்ணிகையாரும் தனி தனி சிலைகளாக இருந்து அருள்ப்பாலித்து வருகின்றனர். மேலும் இந்த கோவில் சுற்றி இருக்கும் எட்டு ஊருக்கு சொந்தமான எல்லை காக்கும் அம்மனாக உள்ளது. இந்த கோவில் எப்போது உருவானது என்று அங்கு உள்ள மக்களுக்கே தெரியாத புதிராகவும் உள்ளது பல நூறு வருடங்கள் பழமையான கோவிலாக இருக்கலாம் என அங்கு உள்ள மக்களால் நம்பப்படுகிறது. இப்போது 2024 ஆண்டு முதல் கோயில் கருங்கல்லில் கட்டப்பட்டு வருகிறது.
  • திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணிகை முருகன் கோவிலுக்கு அருகில், கண்ணிகபுரம் செல்லும் சாலையில், அருள்மிகு ஸ்ரீ கண்ணியம்மன் ஆலயம் உள்ளது, இங்கு ஏழு பேரும் ஒரே சன்னதியில் அருள்பாளித்து வருகின்றனர்.
  • செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீதி நாயகி சங்கோதி அம்மன் ஆலயத்தில் சப்த கன்னியருடன் அம்பாள் ஸ்ரீ சங்கோதியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.
Remove ads

சப்த மாதர்கள் வழிபட்ட கோயில் தலங்கள் )

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads