பிரிநிலைக் கண்ணிமுடிச்சு

From Wikipedia, the free encyclopedia

பிரிநிலைக் கண்ணிமுடிச்சு
Remove ads

பிரிநிலைக் கண்ணிமுடிச்சு (Clove hitch) என்பது ஒருவகைக் கண்ணிமுடிச்சு ஆகும். பௌலைன், பாய்மரக் கயிற்றுத் தொடுப்பு என்பவற்றுடன் இதுவும் ஒரு மிகவும் இன்றியமையாத முடிச்சுக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[1] இது ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டப்படும் இரண்டு ஒத்த அரைக் கண்ணிமுடிச்சுக்களை உள்ளடக்கியது. குறுக்கு முடிச்சாகப் பயன்படும்போது இது சிறப்பாகச் செயல்பட வல்லது. இதனைப் பிணைப்பு முடிஆச்சாகவும் பயன்படுத்தலாம் ஆயினும், இவ்வகைத் தேவைக்கு இம்முடிச்சு அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.[2] கயிறொன்றின் நிலைத்தபகுதியில் போடப்படும் பிரிநிலைக் கண்ணிமுடிச்சு, அரைக் கண்ணிமுடிச்சு கட்டப்பட்ட பொருளை நோக்கிச் செல்கிறதா அல்லது எதிர்ப்புறமாகச் செல்கிறதா என்பதைப் பொறுத்து இரண்டு வகைப்படும். இவை, இரண்டு அரைக் கண்ணிமுடிச்சு (Two half-hitches), பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு (Buntline hitch) என்பனவாகும்.

Thumb
A clove hitch formed in the bight and slipped onto a carabiner.
விரைவான உண்மைகள் பிரிநிலைக் கண்ணிமுடிச்சு, வகை ...

வழமையான முறையில் ஒரு முனையில் மட்டும் சுமையேற்றும்போது பிரிநிலைக் கண்ணிமுடிச்சு வழுகிவிடக்கூடியது. குறுக்கு முடிச்சில் பயன்படுவதுபோல இரு முனைகளிலும் சுமையேற்றும்போதே இது திறம்படச் செயல்படும். மெல்லிய அல்லது வழுக்கும் தன்மை கொண்ட கயிறுகளைப் பயன்படுத்தும்போது இம் முடிச்சு அதிகம் நம்பத்தகுந்ததாக இராது. சிறப்பாக, அசைந்தாடும் அல்லது சுற்றுகின்ற பொருட்களைக் கட்டும்போது இலகுவாக அவிழ்ந்துவிடும். இதனாலேயே, செயல்முனையின் நீளத்தைச் சீராக்க வேண்டிய தேவைகள் உள்ள வேளையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். சில வேளைகளில் இம் முடிச்சு அவிழ்ப்பதற்குக் கடினமாக இருக்கும் வகையில் இறுகி விடுவதும் உண்டு.

கழியொன்றைச் சுற்றிப் பிரிநிலைக் கண்ணிமுடிச்சு இடுவதற்கு முதலில் செயல்முனை மேலாக இருக்கும்படி வைத்து அக் கழியைச் சுற்றித் தடம் ஒன்றைப் போடவேண்டும். செயல்முனையை இன்னும் ஒருமுறை கழியைச் சுற்றி எடுத்துக் கயிறு குறுக்காக வெட்டும் இடத்துக்குக் கொண்டுவர வேண்டும். பின்னர் செயல்முனையைக் கயிற்றுச் சந்திப்புக்குக் கீழாக எடுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும்.

இம் முடிச்சைக் கயிற்றின் இடைப்பகுதியிலும் போட்டுக்கொள்ள முடியும். இவ்வாறு போடும்போது கயிற்றின் இரண்டு முனைகளுமே இல்லாமல் போட்டுக்கொள்ளலாம். ஆனால் இதற்குக் கட்டப்படும் ஒருமுனையாவது கயிற்றுத் தடத்தின் ஊடாக அதனைச் செலுத்தும் வகையில் இருக்கவேண்டும். இதற்கு கயிற்றின் இடைப்பகுதியில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கும்படி இரண்டு தடங்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் தடங்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அதனூடாகக் கழியின் ஒரு முனையைச் செலுத்தி வேண்டிய இடத்துக்குக் கொண்டுவந்து இறுக்கிக் கொள்ளலாம். படத்தில் காட்டியபடி ஒரு வளையத்தில் இம்முடிச்சைப் போடுவதற்கும் இறுதியாக விளக்கிய முறை பயன்படும்.

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads