பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரின்சுட்டன் (Princeton பிரின்ஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் அமைந்துள்ள நகராட்சி ஆகும். சனவரி 1, 2013இல் முந்தைய பிரின்சுட்டன் பரோவையும் பிரின்சுட்டன் டவுன்ஷிப்பையும் இணைத்து புதிய பரோவாக சீரமைக்கப்பட்டது. இராரிட்டன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ள பிரின்சுட்டன் ஓர் வட்டார வணிக மையமாக விளங்குகின்றது.[12] 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சியின் மக்கள் தொகை 28,572.[4][5][6][7]

பிரின்சுட்டன்அமெரிக்கப் புரட்சிப் போருக்குமுன்பே நிறுவப்பட்ட நகராகும். இங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்1756இல் நுவார்க்கிலிருந்து இங்கு இடம் பெயர்ந்தது. இந்த நகரம் இந்தப் பல்கலைக்கழகத்தினால் பெரிதும் அறியப்பட்டாலும் பெயர்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் காயர் கல்லூரி, பிரின்சுட்டன் பிளாஸ்மா இயற்பில் ஆய்வகம், பிரின்சுட்டன் மெய்யியல் குருத்துவக் கல்லூரி, பிரிஸ்டல்-மெயர்சு இசுக்யுப்,சீமென்ஸ்மற்றும் டௌ ஜோன்சு & கம்பனி போன்ற நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன.
இந்த நகரம் நியூயார்க்கு நகரத்திற்கும் பிலடெல்பியாவிற்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. பல முதன்மை விரைவுச்சாலைகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. நியூ செர்சியின் தலைநகரமாகிய இட்ரென்டன், நியூ புருன்சுவிக் மற்றும் எடிசன் இதன் அருகில் அமைந்துள்ள நகரங்களாகும்.
1945இலிருந்து பிரின்சுட்டனில் தான் நியூ செர்சி மாநில ஆளுநரின் அலுவல்முறை இல்லம் அமைந்துள்ளது.
2005இல் ஐக்கிய அமெரிக்காவின் வாழத்தகு 100 நகரங்களில் பதினைந்தாவதாக பிரின்சுட்டனை மணி இதழ் மதிப்பிட்டுள்ளது.[13]
Remove ads
மேற்கோள்கள்
மேற்தகவல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads