பிரேமானந்தா தத்தா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரேமானந்தா தத்தா (Premananda Dutta) இவர் ஓர் வங்காள புரட்சியாளரும், இந்தியாவில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான சிட்டகாங் கிளர்ச்சியுடன் இணைந்த இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலருமாவார். [1]

விரைவான உண்மைகள் பிரேமானந்தா தத்தா, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் பிரித்தானிய இந்தியாவில் சிட்டகொங்கில் (சட்டகிராம்) தற்போதைய வங்காளதேசத்தில் பிறந்தார். இவரது தந்தை ஹரிஷ் சந்திர தத்தா பிரம்ம சமாஜத்தின் ஆச்சாரியர் ஆவார். சிட்டகொங் கல்லூரியிலிருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், சிட்டகொங் துறைமுகத்தில் துறைமுக தடுப்பு அதிகாரியாகச் சேர்ந்தார். தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் அழைப்பில் இவர் தனது வேலையை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் இதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிசாரின் அட்டூழியங்களுக்கு எதிராக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இயக்கத்திற்கு ஆதரவாக அசாம் வங்க இரயில்வேயின் வேலைநிறுத்தத்திலும் இவர் தீவிரமாக பங்கேற்றார். இத்தகைய தேசியவாத அரசியல் நடவடிக்கைகளுக்காக இவர் பல முறை சிறைக்குச் சென்றார். 1923 ஆம் ஆண்டில், தத்தா இவர் சிட்டகாங் நகரில் ஒரு உடற்பயிற்சி கூடத்தையும், ஒரு சங்கத்தையும் உருவாக்கினார். இது உண்மையில் சுதந்திர போராளிகளின் ரகசிய குகையாக செயல்பட்டது. [2] [1]

Remove ads

புரட்சிகர நடவடிக்கைகள்

1930 ஆம் ஆண்டில் இவர் சிட்டகொங் பிராந்தியத்தில் சூர்யா சென் தலைமையிலான ஆயுதப் புரட்சியால் ஈர்க்கப்பட்டார். இவர் மூத்த ஆர்வலர் அனந்த சிங்கின் பள்ளி நண்பராக இருந்ததால், அவரது வழிகாட்டுதலுடன் புரட்சிகர நடவடிக்கைக் குழுவில் சேர்ந்தார். முக்கியமாக இவர் ஆயுதங்களை வைத்திருக்கவும், வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைக்கவும், காவல்துறை உளவுத்துறையின் கண்ணிலிருந்து மறைக்கவும் செய்தார். இதற்கிடையில், புலனாய்வுக் கிளையின் ஒரு துணை ஆய்வாளரான, பிரபுல்லா சக்ரவர்த்தி என்பவர் அனந்த சிங்கைப் பிடித்துவைத்து புரட்சிகரக் குழுவின் திட்டங்களில் இடையூறு ஏற்படுத்தினார். பழிவாங்கும் நோக்கத்துடன் இவர், பிரபுல்லாவுடன் நட்பு கொண்டு, மே 24, 1924 அன்று சிட்டகொங் பால்டன் புலத்தில் அவரைச் சந்தித்து ஒரு சுழல் கைத்துப்பாக்கியால் கொன்றார். [3]

Remove ads

விசாரணை

பிரபுல்லா தான் இறப்பதற்கு முன் துணை ஆய்வாளர் இராவ் பகதூர் சதீஷ் ராய் என்பவரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை நேரத்தில் பார் அட் லா ஜதிந்திர மோகன் செங்குப்தா இவரது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார். குறுக்கு விசாரணையில், இவர் குற்றவாளி அல்ல என்று உறுதிப்படுத்தப்படது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இவர் விடுவிக்கப்பட்டார். [4]

இறப்பு

இவர் மீண்டும் நம்பர் 1 வங்காள கட்டளைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அனுப்பப்பட்டார். சிறை வாழ்க்கையில் இவர் சிறை அதிகாரத்தின் அலட்சியம், சித்திரவதை காரணமாக மனதாலும், உளவியலாகவும் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக அரசாங்கம் இவரை ராஞ்சியை அனுப்பியது. அங்கு இவர் இறந்தார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads