புக்கிட் பிந்தாங்

கோலாலம்பூர் மாநகர பொழுதுபோக்கு, கடைவல நகரம் From Wikipedia, the free encyclopedia

புக்கிட் பிந்தாங்map
Remove ads

புக்கிட் பிந்தாங் (மலாய்: Bukit Bintang; ஆங்கிலம்: Bukit Bintang; சீனம்: 武吉免登); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் கடைவல நகரம். இது நகரத்திற்குள் ஒரு நகரம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் புக்கிட் பிந்தாங் Bukit Bintang, நாடு ...
Thumb
புக்கிட் பிந்தாங் இரவு உணவு அங்காடிகள்

புக்கிட் பிந்தாங் நகர மையம், புக்கிட் பிந்தாங் சாலை மற்றும் அவற்றின் அருகில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதி நீண்ட காலமாக கோலாலம்பூரின் மிக முக்கியமான சில்லறை வணிகப் பகுதியாகவும் விளங்கி வருகிறது.

Remove ads

அமைவிடம்




Thumb

2022-இல் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (15.3%)
  சீனர் (71.6%)
  இதர இனத்தவர் (1.1%)

புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள் மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[1]

மலேசியாவில் கணினிப் பொருட்களின் சொர்க்கம் எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங்கிற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[2][3]

2021 சூன் மாதம், கோலாலம்பூர் மாநகராட்சி, புக்கிட் பிந்தாங் சந்திப்பில் சிபுயா பாணியிலான பாதசாரிக் கடவையை (Shibuya-style pedestrian crossing) உருவாக்கியது. 8 கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தின் கீழ் (KL Monorail Line), இந்தப் பாதசாரிக் கடவை அமைந்து உள்ளது. இதற்கு பிந்தாங் நடைபாதை என்று பெயர்.[4][5]

Remove ads

கோலாலம்பூர் தங்க முக்கோணம்

கோலாலம்பூர் தங்க முக்கோணத்திற்குள் (Kuala Lumpur's Golden Triangle) புக்கிட் பிந்தாங் மாவட்டம் அமைந்து உள்ளது. இந்த முக்கோணப் பகுதி புக்கிட் பிந்தாங் சாலையில் தொடங்கி ராஜா சூலான் (Raja Chulan) புது சாலையில் முடிவு அடைகிறது.[6]

புக்கிட் பிந்தாங் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சுல்தான் இசுமாயில் சாலை; இம்பி சாலை (Imbi Road); வால்டர் கிரேனியர் சாலை (Walter Grenier Road); பூலான் சாலை, சங்காட் புக்கிட் பிந்தாங் சாலை (Changkat Bukit Bintang); அலோர் சாலை ஆகியவை இந்த மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப் படுகின்றன.

பன்னாட்டு முதலீடுகள்

இங்கு எண்ணற்ற வணிக மையங்கள்; வணிக வங்கிகள்; கேளிக்கை மையங்கள்; கடைவல மையங்கள்; பேரங்காடிகள்; ஓய்வு நடைபாதைகள்; பன்னாட்டு வணிக விற்பனை நிலையங்கள் அதிகமாக உள்ளன.[7] இங்குள்ள நிலச் சொத்துக்களின் மதிப்பும் மிக உயர்ந்து காணப்படுகிறது. பன்னாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகள் செய்வதில் அதிக விருப்பம் காட்டுகின்றனர். அவற்றின் காரணமாக இந்த இடம், தங்க முக்கோணம் எனும் அடைமொழியைப் பெற்றது.[8]

புக்கிட் பிந்தாங் நகரத்தின் தெற்கில் புடு செராஸ்; மேற்கில் பெட்டாலிங் தெரு (Chinatown), வடக்கில் புக்கிட் நானாஸ், வட கிழக்கில் கோலாலம்பூர் நகர மையம் (KLCC); கிழக்கில் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் வானளாவி (Tun Razak Exchange), மாலூரி மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[9]

Remove ads

புகழ்பெற்ற வணிக வளாகங்கள்

Thumb
புக்கிட் பிந்தாங் லாட் 10 வளாகம்

புக்கிட் பிந்தாங் நகர மையம், மலேசியாவில் புகழ்பெற்ற கடைவல மாவட்டங்களில் ஒன்றாகும்.

போன்ற வணிக வளாகங்கள் இந்தப் பகுதியில்தான் அமைந்து உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, மலேசியாவில் பெரும்பாலோருக்கு நன்கு அறியப்பட்ட வளாகங்கள் ஆகும்.[10]

கோலாலம்பூர் தங்க முக்கோண வரைபடம்

Thumb
கோலாலம்பூர் தங்க முக்கோணம்

மேலும் காண்க

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads