புக்கிட் பெருவாங்
மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் பெருவாங் (மலாய்; ஆங்கிலம்: Bukit Beruang; சீனம்: 武吉伯鲁昂); என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலாக்காவில் மிகப் பழைமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு காலத்தில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த இடமாகவும் அறியப்படுகிறது.
இந்த நகரத்திற்கு அருகில் 116 அடி உயரம் கொண்ட ஒரு குன்று உள்ளது. அந்த குன்றின் பெயரால் இந்த நகரத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்தக் குன்று நடைப் பயணத்திற்கு பிரபலமான இடமாகவும் விளங்குகிறது.[3][4]
Remove ads
பொது
புக்கிட் பெருவாங் எனும் பெயரில் இரு சொற்களின் பொருள் உள்ளது. மலாய் மொழியில் புக்கிட் (Bukit) என்றால் குன்று;. பெருவாங் (Beruang) என்றால் கரடி என்று பொருள். முன்பு காலத்தில் இங்கு கரடிகள் வாழ்ந்ததாக கிராம மக்களின் புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றன.
மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகோம் மலேசியா நிறுவனத்திற்குச் சொந்தமான மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம் (Multimedia University); புக்கிட் பெருவாங் நகரத்தில் மிகவும் பிரபலமான அடையாளமாகக் கருதப்படுகிறது.
Remove ads
குடியிருப்பு வீடுமனை வளாகங்கள்
- ரூமா அவாம் புக்கிட் பெருவாங்
- தாமான் பூங்கா ராயா
- தாமான் புக்கிட் மலாக்கா
- தாமான் கெர்ஜாசாமா
- தாமான் பரிதா
- தாமான் மேகா
- தாமான் புக்கிட் பெருவாங்
- தாமான் புக்கிட் பெருவாங் உத்தாமா
- தாமான் டெலியா
- தாமான் புக்கிட் பெருவாங் பெர்மாய்
- தாமான் புக்கிட் பெருவாங் இண்டா
- தாமான் சந்தோசா
- தாமான் சரோஜா
- கம்போங் புக்கிட் பெருவாங் ஜெயா
- தாமான் மெளவிஸ்
- கம்போங் பாரு புக்கிட் பெருவாங்
- கம்போங் சாகா புக்கிட் பெருவாங்
- கம்போங் வக்காப்
- கம்போங் டெலோக்
- செரி தெமங்கோங் போலீஸ் அடுக்குமாடி
- இக்சோரா அடுக்குமாடி
- தாமான் சௌஜானா கெமோக் வான் சைருல்
Remove ads
அருகாமை நகரங்கள்
- புக்கிட் மலாக்கா
- ஆயர் குரோ
- புக்கிட் கட்டில்
- பத்து பிரண்டாம்
- புக்கிட் பாரு
மேலும் காண்க
- மத்திய மலாக்கா மாவட்டம்
- டெலிகோம் மலேசியா
- மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம்
- ஆங் துவா ஜெயா நகராட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads