புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். புதுச்சேரியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.22 மீட்டர் உயரத்தில், (11.9399°N 79.8296°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு புதுச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிதைவு
கி. பி. 1748 ஆம் ஆண்டில் அந்நிய ஆட்சியாளர்களால் முழுவதுமாக சிதைக்கப்பட்ட இதன் மூலகோயில் கி. பி. 1788 ஆம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.[2]
மறு உருவாக்கம்
திவான் கந்தப்ப முதலியார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் கி. பி. 1788 ஆம் ஆண்டு மறு உருவாக்கம் பெற்ற இக்கோயிலில் ஐந்து நிலைகள் கொண்ட இராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.[3] இந்த இராஜ கோபுரம் 23 மீட்டர் உயரம் கொண்டது.[4]
பிற சன்னதிகள்
மூலவர் வேதபுரீசுவரர் சன்னதியுடன் இறைவி திரிபுரசுந்தரி, அழகு விநாயகர், விஷ்ணு துர்க்கை, பைரவர் மற்றும் அறுபத்து மூவர் ஆகியோரது சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
