புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா

புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்கா From Wikipedia, the free encyclopedia

புத்ராஜெயா ஈரநிலப் பூங்காmap
Remove ads

புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா (ஆங்கிலம்: Putrajaya Wetlands Park; மலாய் மொழி: Taman Wetlands Putrajaya; சீனம்: 布城湿地公园) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்காவாகும். வெப்ப மண்டலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய நன்னீர் ஈரநிலப் பூங்கா என அறியப்படுகிறது.[1][2]

விரைவான உண்மைகள் புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா Putrajaya Wetlands Park Taman Wetlands Putrajaya, அமைவிடம் ...

மலேசியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் ஈரநிலம் இதுவாகும். புத்ராஜெயாவின் ஈரநில சூழலுக்கான நுழைவாயிலாக இந்தப் பூங்கா செயல்படுகிறது.[3]

Remove ads

பொது

புத்ராஜெயா ஏரி மற்றும் புத்ராஜெயா ஈரநிலப் பூங்காவின் கட்டுமானம் 1998-இல் தொடங்கப்பட்டு 2002-இல் நிறைவடைந்தது. புத்ராஜெயா ஈரநில மீன் வளர்ப்புக் குளங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட சதுப்பு நில தாவரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

மேலும், உயிரியல் அடிப்படையில் மாறுபட்டச் சூழலை உருவாக்க ஈரநிலச் செல்களுக்கு 24 வகையான உள்நாட்டு மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[4]

புலம்பெயரும் பறவைகள்

ஈரநிலப் பூங்கா ஒரு வனவிலங்கு காப்பகமாகவும் செயல்படுகிறது; மற்றும் பறவைகள் கண்காணிப்புத் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 100 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

அவற்றில் பல வகையான உள்ளூர் சதுப்பு நிலப் பறவைகளுக்கும் இந்தப் பூங்கா காப்பமாமாகத் திகழ்கிறது. சின்னக் கொக்குகள், சிறிய பச்சை நாரைகள் மற்றும் செங்குருகுகள் உட்பட நீர்ப் பறவைகள் மற்றும் வட அரைக்கோளத்தில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் அங்கு காணப்படுகின்றன.

பறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்களுக்கு இந்தப் பூங்கா ஒரு சொர்க்கபுரி என்றும் சொல்லப்படுகிறது.[5]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads