புத்ராஜெயா கெமிலாங் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்ராஜெயா கெமிலாங் பாலம் (மலாய்: Jambatan Seri Gemilang; ஆங்கிலம்: Seri Gemilang Bridge) என்பது மலேசியாவின் புத்ராஜெயாவில் உள்ள ஒரு சடங்கு பாலமாகும் (Ceremonial Bridge). புத்ராஜெயாவில் உள்ள ஐந்து முக்கியமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
புத்ராஜெயாவின் முதன்மைச் சாலையின் (Main Street of Putrajaya) தொடக்கத்தை இந்தப் பாலம் இணைக்கிறது. பாலத்தின் சாலை இறுதிப்பகுதி, புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தை (Putrajaya International Convention Centre) அடைகிறது.[2]
Remove ads
பொது
பாலத்தின் ஒருபுறம் ஓர் அணை உள்ளது. மற்றொரு புறம் ஓர் ஏரி உள்ளது. அந்த ஏரி சைபர்ஜெயா (Cyberjaya) வரை நீண்டு செல்கிறது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கள் திருமணப் புகைப்படங்களை இங்கே எடுக்க விரும்புவது வழக்கம்.[2]
புள்ளி விவரங்கள்
இந்த பாலம் 120 மீட்டர் (394 அடி) நீளம் கொண்ட பிரதான (Main Span) இடைவெளியைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடு மையத்தில் இருந்து ஒவ்வொரு முனையும் 60-மீட்டர் (197 அடி) நீளம் கொண்டது.
இதன் மொத்த நீளம் 240 மீட்டர்கள் (787 அடி). ஆறு போக்குவரத்து பாதைகள் உள்ளன. ஒவ்வொரு பாதையும் 3.5 மீட்டர் (11.5 அடி) அகலம். பாலத்தின் மையத்தில் 36.75 மீட்டர் (121 அடி) உயரத்தில் தண்ணீருக்கு மேல் தளம் (Deck Level) உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
