புனித ஜோசப் தேவாலயம், மான்னானம்
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மான்னானம் புனித ஜோசப் தேவாலயம் என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், மான்னானத்தில் அமைந்துள்ள ஒரு சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவால் ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது மற்றும் அவரது திருஉடல் எச்சங்கள் தேவாலயத்தில் பாதுகாப்பட்டுள்ளது. [1]

Remove ads
யாத்திரை மையம்
புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த தேவாலயம் ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். தேவாலயப் பணிகள் அவரால் 11 மே 1831 இல் துவக்கபட்டு 1837 இல் நிறைவடைந்தது. இதன் பின்னர் 1955 மற்றும் 1996 இல் புதுப்பிக்கப்பட்டது. தேவாலய வளாகத்தில் துறவிகளுக்கான குடியிருப்பு பிரிவும் உள்ளது. [2]
புனித குரியகோஸ் 1846 ஆம் ஆண்டில் தேவாலய வளாகத்தில் கோட்டயத்தின் முதல் அச்சகத்தை தொடங்கினார். முதல் மலையாள நாளேடான நஸ்ரானி தீபிகாவை வெளியிட அச்சகம் பயன்படுத்தப்பட்டது. 1871 இல் புனித குரியகோஸ் இறந்தபோது, கூனம்மாவு புனித பிலோமினா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் எச்சங்கள் பின்னர் 1889 இல் புனித ஜோசப் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டன. [3] [4]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads