புனித பவுலின் பேராலயம் (கொல்கத்தா)

From Wikipedia, the free encyclopedia

புனித பவுலின் பேராலயம் (கொல்கத்தா)map
Remove ads

புனித பவுலின் பேராலயம் (St. Paul's Cathedral) கொல்கத்தாவிலுள்ள ஆங்கலிக்கப் பேராலயமாகும். இப்பேராலயம் திருத்தூதர் பவுலுக்கு) அர்ப்பணிப்பட்டுள்ளது. இதன் கோதிக் பாணி கட்டிடக்கலைக்காக அறியப்படுகிறது. 1839 இல் இப்பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1847 இல் கட்டி முடிக்கப்பட்டது[1] கொல்கத்தாவின் மிகப்பெரிய தேவாலயமாகவும் ஆசியாவின் முதலாவது ஆங்கலிக்கத் தேவாலயமாகவும் உள்ளது.[2][3] மேலும் பிரித்தானியப் பேரரசின் முதல் நாடுகடந்து புதிதாகக் கட்டப்பட்ட முதல் பேராலயமுமாகும். 1800களில் கொல்காத்தாவில் அதிகரித்துவந்த ஐரோப்பியச் சமூகத்தினருக்காக கதீடரல் தெருவில் அமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் புனித பவுலின் பேராலயம், அமைவிடம் ...

இப்பேராலயத்தின் நிறுவனரான அருள்திரு டேனியல் வில்சன் மற்றும் 1871 இல், கொல்கத்தாவின் நகர்மண்டபத்தின் படிகளில் வைத்துக் கொலை செய்யப்பட்ட ஜான் பாக்ஸ்டன் நார்மன் (பொறுப்பு தலைமை நீதிபதி) இருவரின் கல்லறைகளும் இவ்வளாகத்துள் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க நபர்களின் கல்லறைகளுள் அடங்கும்.

Remove ads

அமைவிடம்

51, சௌரங்கித் தெருவிலுள்ள அருள்தந்தை இல்லத்திலிருந்து விக்டோரியா நினைவிடத்துக்கு வரையப்படும் பார்வை நேர்கோட்டில் அமைந்துள்ள இப்பேராலயம்[4], விக்டோரியா நினைவிடத்துக்கு கிழக்காகவும் கொல்கத்தாவின் மிகப்பெரிய திறந்தவெளியிடமான மைதானத்தின் தென்கரையிலுமுள்ளது.[5]

விக்டோரியா நினைவிடம், இரவீந்திரா சதன் திரையரங்க வளாகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றுடன் கத்தீடரல் தெருவிலுள்ளது.[6][7]

படக் காட்சி

[8]

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads