புனித மரியன்னை பேராலயம், மதுரை
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனித மரியன்னை பேராலயம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் உரோம கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.[1]

Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 157.1 மீட்டர்கள் (515 அடி) உயரத்தில், (9°54′48.3″N 78°07′32.7″E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை நகரின் கீழ வெளி வீதியில் இத்தேவாலயம் அமையப் பெற்றுள்ளது.[2]
விபரங்கள்
கி. பி. 1840ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட[3] இத்திருத்தலத்தின் கட்டிடப் பணியானது, 1841ஆம் ஆண்டு தேவாலயமாக உருப்பெற்றது.[4] தமிழ்நாட்டின் பிரபலமான தேவாலயங்களில் மதுரையிலுள்ள இதுவும் ஒன்றாகும்.[5]
இப்பேராலயத்தின் கோபுரங்களில் செர்மானியக் கட்டடக்கலை நுணுக்கங்கள், தூண்களில் கிரேக்க வடிவமைப்பு கலைகள், சிறு கோபுரங்களில் போர்த்துக்கீசிய கலைநயங்கள், சன்னல் கண்ணாடிகளின் பெல்சிய கலைவடிவங்கள், சிறு உள்கூரை வளைவு அமைப்புகளில் கோத்திக் வடிவ முறைகள், பீடத்தில் இத்தாலிய வெனீசிய கலை நுணுக்கங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.[6] கிரேக்க, உரோம, செர்மானிய, கோத்திக் கலைகளின் சங்கமத்தில் இத்தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[7]
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads