புனே பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனே பொறியியல் கல்லூரி (College of Engineering Pune (COEP), இந்தியாவின் மகாராட்டிரா]] மாநிலத்தின் புனே நகரத்தின் மையப்பகுதியான சிவாஜி நகரில் 36.81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரி புனே பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும். கிண்டி பொறியியல் கல்லூரி (1794) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (1847)-க்கு அடுத்து பிரித்தானிய இந்தியாவில் 1854-இல் துவக்கப்பட்ட மூன்றாவது பொறியியல் கல்லூரி இதுவாகும்.[2][3][4] இக்கல்லூரி வளாகத்தை 2003-இல் மகாராட்டிரா அரசு பாரம்பரிய வளாகமாக அறிவித்துள்ளது.[5]
Remove ads
மாணவர் சேர்க்கை
இளநிலைப் பட்டப் படிப்புகள்
மகாராட்டிரா மாநில பொது நுழைவுத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் இளநிலைப் படிப்புகளில் (B. E) மாணவர் சேர்க்கை நடைபெற்றது.[6][7][8]
தற்போது மகாராட்டிர மாநிலப் பொது நுழைவுத் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் + 2 அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு முறையும் கடைபிடிக்கப்படுகிறது.[9]
முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகள்
பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு மூலம் முதுநிலை தொழில்நுட்ப (M.Tech) படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் பொறியியலில் பல்துறையில் ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டங்கள் வழங்குகிறது.[10] பயன்பாட்டுச் சுற்றுச் சூழழியல் மற்றும் பயன்பாட்டு வேதியியல் துறைகளில் ஆய்வு முனைவர் படிப்புகள் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads