பூவக்கோன்பட்டி

From Wikipedia, the free encyclopedia

பூவக்கோன்பட்டிmap
Remove ads

பூவக்கோன்பட்டி (Poovakkonpatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது மேலப்பனையூர் கிராம ஊராட்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. பூவக்கோன்பட்டி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 622412 ஆகும்.[4]

மேலதிகத் தகவல்கள் அம்சம், விவரம் ...
விரைவான உண்மைகள்
Remove ads

பெயர்க்காரணம்

செவிவழிச் செய்திகளின் படி, இந்த ஊரின் பெயர் அதன் உள்ளூர் வரலாற்றுடன் ஆழமாகத் தொடர்புடையது. பனையூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த "பூவக்கோனார்" என்றழைக்கப்பட்ட கோனார் குடியைச் சேர்ந்தவரின் குடும்பம், அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போதுள்ள இடத்தில் ஒரு புதிய குடியிருப்பினை உருவாக்கினர்.

அவ்வாறு குடியேறிய பூவக்கோனாரின் பெயரால், இந்தப் புதிய குடியிருப்பு "பூவக்கோன்பட்டி" என அழைக்கப்படலாயிற்று. "பட்டி" என்பது சிற்றூரைக் குறிக்கும் சொல்லாகும். இன்றும் இந்த ஊர், தனது தாய் கிராமமான மேலப்பனையூரின் நிர்வாகத்தின் கீழ் அமைந்திருப்பது இந்த வரலாற்றுத் தொடர்புக்குச் சான்றாக உள்ளது. அது மற்றுமல்லாது, பனையூரிலுள்ள திரு பொய்சொல்லா மெய்ய ஐயனார் காட்சியருளும் அழகப்பெருமாள் கோவில் இவர்களது குலதெய்வக் கோவிலாக உள்ளதும் ஒரு சான்று. அதன் அருகேயுள்ள கரையாளன் கோவிலும் பூவக்கோன்பட்டி மக்கள் கட்டியே கோவிலே என்று அங்குள்ள மக்கள் அறிகின்றனர்.

Remove ads

அமைவிடமும், நிருவாகமும்

பூவக்கோன்பட்டி, திருமயம் வட்டத்தில், மேலப்பனையூர் கிராம ஊராட்சியின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது. இந்த ஊர் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[6]

பண்பாடும், வழிபாட்டுத் தலங்களும்

இவ்வூர் சிற்றூர் ஆகும். இது மேலப்பனையூர் கிராம ஊராட்சியின் ஒரு பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் பனையூரிலுள்ள குலதெய்வக் கோவிலான அழகப்பெருமாள் கோவிலுக்குச் செல்வதும் அங்கு விளிக்குப்பூசை நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பனையூரிலுள்ள அழகப்பெருமாள் கோவில், அம்மன் கோவில், சிவன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறையாவது பிரசாதத்திற்குச் சமையல் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பிரசாதத்தைப் பெற்றுவிட்டு அர்ச்சனை செய்வது வழக்கம்.

அடிப்படை வசதிகள்

ஒரு சிற்றூராக இருப்பதால், சாலை வசதிகள், குடிநீர் விநியோகம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மேலப்பனையூர் கிராம ஊராட்சி மூலம் நிர்வகிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. 2025-ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூலம் இந்த ஊர் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பனையப்பட்டி, பனையூர் போன்ற ஊர்களுக்கு புதிய சாலை போடப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads