பெண்கள் கிறித்தவக் கல்லூரி, கொல்கத்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண்கள் கிறித்தவக் கல்லூரி, கொல்கத்தா என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தாவில் 1945 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பெண்களுக்கான இளங்கலை கல்லூரியாகும். [1][2] இளங்கலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
வரலாறு
வங்காள மொழி பேசும் இந்திய கிறிஸ்தவர்களின் கல்விக்காக 19 ஜூலை 1945 அன்று செல்வி ஸ்டெல்லா போஸ் மற்றும் செல்வி நிராஜ்பாஷினி ஷோம் ஆகிய இரண்டு தொலைநோக்கு கல்வியாளர்களால் நிறுவப்பட்டது. லண்டன் மிஷனரி இயக்கம் இக்கல்லூரியின் தற்போதைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள தரை தளத்தையும் இரண்டு அறைகளையும் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்த அனுமதித்தது. அதிலே கலைப்பிரிவில் இடைநிலை (ஐ. ஏ.) பாடநெறி 1945-'46 ஆண்டில் மூன்று மாணவர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது, ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கை இருபத்தி இரண்டு ஆக உயர்ந்ததன் அடிப்படையில் 1947-48 ஆம் ஆண்டில் ஐ. ஏ. படிப்புக்கும், 1948-49 ஆம் ஆண்டில் பி. ஏ. பாடத்திற்கும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சரோஜ் நளினி நினைவு நிறுவனம், [4] ஆக்ஸ்போர்டு இயக்கத்தின் சகோதரிகள், [5] ஆகிய தொண்டு நிறுவனங்கள் இக்கல்லூரிக்கு தளபாடங்களையும், புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது, வாடகைக்கு இருந்த அதே இடத்தை லண்டன் மிஷனரி இயக்கத்திடமிருந்து ஆறு கோட்டா நிலம் மற்றும் கட்டிடத்தை 1952 மே மாதம் ரூ. 30,000/- க்கு நிர்வாகம் விலைக்கு வாங்கியது மேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு புதிய வளாகங்களையும் கையகப்படுத்தி தற்போதைய வளாகங்கள் நிறுவப்பட்டுள்ளது. மெதடிஸ்ட் மிஷன், பாப்டிஸ்ட் மிஷன் மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்து போன்ற நன்கொடையாளரிடமிருந்தும் மாநில அரசிடமிருந்தும் நிதி உதவி பெறப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழு உதவியுடன் பி. ஏ. படிப்புக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அரங்க மண்டபம் ஆகியவைகள் கட்டப்பட்டுள்ளது.
சாதி, மதம் அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் மதப் பின்னணியைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஒரு உள்நாட்டு கல்வி நிறுவனமாக இது இருந்து வருகிறது. தேவையான அனைத்து தொழில்நுட்ப, இணை பாடத்திட்ட மற்றும் கூடுதல் பாடத்திட்ட திறன்களையும் பயன்படுத்தி பயிற்றுவிக்கபடுகிறது.
ஆரம்பத்திலிருந்தே கல்லூரியில் பெண்களுக்கான விடுதி இயங்கிவருகிறது, இது வெளிமாநில மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தற்போது கல்லூரியில் ஒரு சிறிய தேவாலயம், ஒரு கணினி பயிற்சி மையம், ஒரு மத்திய நூலகம், ஒரு கருத்தரங்கு மண்டபம் மற்றும் ஒரு ஆடியோ-காட்சி அறை அடங்கிய மூன்று வளாகக் கட்டிடங்கள் உள்ளன.
Remove ads
படிப்புகள்
வங்காளம், அரசியல் அறிவியல், சமூகவியல், கல்வி, தத்துவம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், கணிதம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு பாடங்களில் இளங்கலை (கவுரவ மற்றும் பொது)[6] பட்டப்படிப்புகளை வழங்கும் கலை மற்றும் அறிவியல் பிரிவுகள் இந்த கல்லூரியில் உள்ளன. அத்தோடு நேதாஜி சுபாஷ் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (என்எஸ்ஓயு) ஆதரவின் கீழ் தொலைதூரக் கல்வியில் முதுகலை படிப்புகளாக ஆங்கிலம், பெங்காலி, கணிதம், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகப் பணி மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் (ஈஎல்டி) ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன. [7] வங்காளத்தில் 2 ஆண்டு முதுகலை படிப்புக்கும், என்எஸ்ஓயு-இன் கீழ் 1 ஆண்டு பட்டயப் படிப்புக்கும் ஒரே ஆய்வு மையமாக இந்த கல்லூரி மட்டுமே இயங்குகிறது.
இக்கல்லூரியில் வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, அரசியல் அறிவியல், தத்துவம், கல்வி மற்றும் சமூகவியல் ஆகிய ஆறு கலைப் பிரிவுகளும், பொருளாதாரம், புவியியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று அறிவியல் பிரிவுகளும் உள்ளன.
மத்திய நூலகம்
இக்கல்லூரி கட்டிடத்தின் சி பிளாக்கில் மத்திய நூலகம் அமைந்துள்ளது. 1945 ஆம் ஆண்டில் கல்லூரி நிறுவப்பட்டதிலிருந்தே மகளிர் கிறிஸ்தவ கல்லூரி நூலகமும் இயங்கிவருகிறது. கோஹா நூலக மென்பொருளுடன் முழுமையாக தானியங்கி மயமாக்கப்பட்ட இது நிறுவனத்தின் கற்றல் வளங்களின் மையமாக உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் பாடங்களுக்கான புத்தகங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு புத்தகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கையேடு , மேற்கோள் புத்தகங்களின் தொகுப்பு என அனைத்து பிரிவுகளிலும் உள்ள பல்வேறு தலைப்புகளில் சுமார் 25,801 புத்தகங்களின் வளமான சேகரிப்பு இந்நூலகத்தில் உள்ளது.[8]
Remove ads
சங்கங்கள்
கல்லூரியின் மாணவர்கள் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், பெண்கள் நலன், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வறுமை ஒழிப்பு போன்ற துறைகளிலும் சமூகத்திற்கு சேவை செய்ய பல்வேறு பிரிவுகள், அலகுகள் மற்றும் சங்கங்கள் உள்ளன.
- தேசிய சேவைத் திட்டம் (என். எஸ். எஸ்.)
- சுற்றுச்சூழல் சங்கம்
- பெண்கள் படிப்பரங்கம்
- திரைப்படக் கழகம்
- விவாதக் கழகம்
- நிகழ்த்து கலைப் பிரிவு
- வழிகாட்டல், ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு
- கருத்தரங்கு மற்றும் ஆராய்ச்சி பிரிவு
- மக்கள் தொடர்பு குழு
- உள் புகார்கள் குழு
==அங்கீகாரம்
கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மூலம் இது ஒரு ஏ தரக்கல்லூரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தன்னாட்சி கொண்ட கிறிஸ்தவ அமைப்பான வங்காள கிறிஸ்துவ அவையின் ஆதரவின் கீழ் செயல்படும், இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் மானிய உதவிகள் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [9]
மேலும் காண்க
- கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads