பெல்காடியா அரண்மனை

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ளது. From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெல்காடியா அரண்மனை (Belgadia Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் விக்டோரியா மகாராணி கால பாணியில் மலை உச்சியில் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.[1] [2] [3] [4]

வரலாறு

1796 ஆம் ஆண்டு முதல் 1810 ஆம் ஆண்டு வரை மாநிலத்தை ஆண்ட மகாராணி சுமித்ரா தேவி பாஞ்ச் தியோ, 1804 ஆம் ஆண்டில் அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். இவருடைய சந்ததியினர் அரண்மனையை அரச விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தினர். தற்போதைய உட்புறங்கள் மயூர்பஞ்சி பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான மகாராசா சிறீராம் சந்திர பஞ்ச் தியோவின் (1882-1912) ஆட்சியின் போது கட்டப்பட்டது. மகாராசா கிருட்டிண சந்திர பாஞ்ச் தியோ (1868-1882) மற்றும் பிரதாப் சந்திர பாஞ்ச் தியோ (1928-1948) ஆகியோர் மயூர்பஞ்சி பகுதியில் பிரபலமாக ஆட்சி செய்தவர்களாவர். [5] [6] ஒட்டுமொத்த கட்டுமானம் விக்டோரியன் மற்றும் கிரேக்க கட்டிடக்கலை பாணியின் கலவையாகும். மேலும் இந்த அரண்மனை பக்கிங்காம் அரண்மனையின் பாணியை பிரதிபலிக்கிறது. [1] [7]

பெல்காடியா அரண்மனை தற்போதைய மகாராசா பிரவீன் சந்திர பாஞ்தியோ (பஞ்ச் வம்சத்தின் 47 ஆவது ஆட்சியாளர்), செய்சால்மரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மயூர்பஞ்ச் ராசுமி ராச்யலட்சுமி பாஞ்ச் தியோ ராணியின் வசிப்பிடமாகும்), இராச மாதா பாரதி ராச்யலட்சுமி தேவி (நேபாள மன்னர்ர் திரிபுவனின் மகள்) மகள்கள் மிருணாலிகா எம் பாஞ்ச் தியோ மற்றும் அசிஷிதா எம் பாஞ்ச் தியோ ஆகியோரின் வசிப்பிடமாகும். [1] [8]

அரண்மனையின் ஒரு பகுதி 2015 ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய உணவு விடுதியாக மாற்றப்பட்டது. [9] [10]

Remove ads

அமைவிடம்

அரண்மனை ஒடிசாவின் சிம்லிபால் மற்றும் பரிபாடா காடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது யுனெசுகோ உலக உயிர்க்கோள காப்பகங்களின் ஒரு பகுதியாகும். [8]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads