பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் (Begumpur Mosque, Begumpur Big Mosque), திண்டுக்கலிலுள்ள பேகம்பூரில் அமைந்துள்ளது. இது திண்டுக்கலிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் ஐதர் அலியால் கட்டப்பட்டது.[1][2]
Remove ads
வரலாறு
முன்பு திண்டுக்கல் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று. ஹைதர் அலி அவர்களின் தங்கை, அமீருன்னிசா பேகம் ஆவார். அமீருன்னிசா பேகத்தின் கணவர் மிர்சா அலிக்கான் (Mirza ali khan) ஆவார். அமீருன்னிசா பேகம் கி.பி.1772 ல் திண்டுக்கல்லில் மரணமடைந்தார்.அவர் திண்டுக்கல் பெரிய பள்ளி வாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்று அழைக்கப்படுகிறது.[1][3][4][5] மைசூர் மன்னர் ஐதர் அலி திண்டுக்கல் நகரில் 3 பள்ளிவாசல்கள் கட்டினார். அவற்றில் மிகப்பெரியதுதான் இந்த பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஆகும்.[5]
Remove ads
அமைப்பு
மைதானம்
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் பெரிய மைதானத்தை கொண்டது. மைதானத்திற்கு மூன்று நுழைவாயில்கள் கொண்டது. கிழக்கு நோக்கிய நுழைவாயில் முதன்மை நுழைவாயிலாகும். முதன்மை நுழைவாயில் வழியாக உள்ளே மைதானத்தில் அமீருன்னிசா பேகத்தின் தர்கா உள்ளது. மைதானத்தின் மேற்கு நோக்கிய நுழைவாயில் அடக்கத்தலம் (கபர்ஸ்தான்) செல்லும் நுழைவாயிலாகும். தெற்கு நுழைவாயில் பகுதியில் பேகம்பூர் அஞ்சல் அலுவலகம் பள்ளிவாசலின் இடத்தில் இயங்கி வருகிறது. மைதானத்தில் பள்ளிவாசல் கட்டிடத்தின் நுழைவாயில் அருகே தப்லீக் ஜமாத் தமிழ்நாடு தலைமை மர்கஸ் இயங்கிவருகிறது.[6]
பள்ளிவாசல்
பள்ளிவாசலின் முன் பகுதியில் திறந்த வெளிப்பகுதி உள்ளது. அதனுள் பெரிய தொழுகை இடம் அமைந்துள்ளது. பள்ளிவாசல் 2 மினார்களும் ஒரு குவிமாடமும் கொண்டது.
Remove ads
கலாச்சாரம்
இப்பள்ளிவாசலில் ரமலான், பக்ரீத் போன்ற தினங்களில் சிறப்பு தொழுகை மைதானத்தில் நடைபெறும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்பு தொழுகை நடைபெறும். இசுலாமிய கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் நடைபெறுகிறது. அமீருன்னிசா பேகம் தர்காவிற்கு வருடந்தோறும் உரூஸ் நடைபெறும்.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads