பேரியம் மாங்கனேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரியம் மாங்கனேட்டு (Barium manganate ) என்பது BaMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கனிம வேதியியலில் இச்சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.[2] மாங்கனீசு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் வேதிச்சேர்மங்கள் வகையில் இச்சேர்மமும் இடம் பெறுகிறது. பேரியம் மாங்கனேட்டு, பெர்மாங்கனேட்டில் இருந்து வேறுபட்டதாகும். பெர்மாங்கனேட்டில் மாங்கனீசு(VII) இடம்பெற்றுள்ளது. பேரியம் மாங்கனேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால், இது பரவலான ஆக்சிசனேற்ற வினைகளிலும் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
பண்புகள்
மாங்கனேட்டு(VI) அயனியானது ஒரு d1 அயனியாகும். நான்முக வடிவில் பிணைந்துள்ள இப்பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 109.5° ஆகும்.BaMnO4 மற்றும் K2MnO4 சேர்மங்களில் காணப்படும் Mn-O பிணைப்புகளின் பிணைப்பு நீளம் முற்றிணையாக 1.66 Å. நீளம் கொண்டிருக்கின்றன. MnO4 2- மற்றும் MnO4− அயனிகளை ஒப்பிட்டு நோக்கினால், Mn-O பிணைப்பு நீளம் MnO4−அயனியில் உள்ள 1.56 Å என்பதைவிட அதிகமாகவும். MnO2 உள்ள Mn-O பிணைப்பின் நீளத்தைவிடக் (1.89 Å) குறைவாகவும் காணப்படுகிறது.[3][4] BaCrO4 மற்றும் BaSO4. சேர்மங்களுடன் பேரியம் மாங்கனேட்டுச் சேர்மமானது ஒத்த வடிவமைப்பைக் கொண்டு பார்ப்பதற்கு அடர் நீலம் அல்லது கரும் பச்சை நிறப்படிகங்களாகத் தோற்றமளிக்கிறது.[5] மேலும், இச்சேர்மம் காலவரையற்று நிலைப்புத்தன்மையும் செயல்திறனும் கொண்டிருப்பதால் உலர்நிலையில் இதைப் பலமாதங்களுக்கு சேமித்து வைக்க இயலும்.
Remove ads
தயாரிப்பு
பொட்டாசியம் மாங்கனேட்டு மற்றும் பேரியம் குளோரைடு முதலிய சேர்மங்கள், உப்பு தலைகீழாக்க வினையின் மூலமாக பேரியம் மாங்கனேட்டைக் கொடுக்கின்றன.[6]
- BaCl2 + K2 MnO4 → 2 KCl + BaMnO4
கரிம வேதியியல் பயன்கள்
பேரியம் மாங்கனேட்டு பல்வேறு வேதி வினைக்குழுக்களை தேர்ந்தெடுத்தும் திறனோடும் ஆக்சிசனேற்றம் செய்கிறது. ஆல்ககால்களை கார்பனைல்களாகவும், டையால்களை லாக்டோன்களாகவும், தையோல்களை இருசல்பைடுகளாகவும், அரோமாட்டிக் அமீன்களை அசோ சேர்மங்களாகவும், ஐதரோ குயினோன்களை பாரா பென்சோகுயினோன்களாகவும், பென்சைலமீன்களை பென்சால்டிகைடுகளாகவும் என பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற வினைகளை இவை தருகின்றன[7] . நிறைவுற்ற ஐதரோகார்பன்கள், ஆல்க்கீன்கள், நிறைவுறாத கீட்டோன்கள், மூன்றாம்நிலை அமீன்கள் ஆகியவற்றை இது ஆக்சிசனேற்றம் செய்வதில்லை. பொதுவாக MnO2. சேர்மத்திற்கு மாற்றாக பேரியம் மாங்கனேட்டு சேர்மம் பயன்படுகிறது. தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானதாகவும் திறனுடன் வினைபுரிய வல்லதாகவும் விளங்கும் பேரியம் மாங்கனேட்டு ஆக்சிசனேற்றக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாகச் செயல்படுகிறது.
மாங்கனீசு நீலம் என்ற நிறமி தயாரிப்பிலும் பேரியம் மாங்கனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads