பேரையூர் நாகநாதசுவாமி கோயில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் என்னும் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நாகநாதசுவாமி கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் குறிப்பிடத்தக்க கோயிலாகும்.[1]

இறைவன், இறைவி

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி பிரகதாம்பாள்.

நாகராஜா வழிபாடு

கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகளில் பலவற்றை கோயில்களின் சுற்றுச்சுவர்களில் அமைத்துள்ளனர். இயற்கை வழிபாட்டின் ஆரம்ப கால நிலையில் நாக வழிபாடும் அமையும். இக்கோயிலில் 1865, 1977 மற்றும் 1989இல் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.[2]

கல்வெட்டு

இக்கோயிலில் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த (பொ.ஊ. 1012-1044) கல்வெட்டுக்கள் உள்ளன. பிற சோழ மன்னர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான்கள் உள்ளிட்ட பலருடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.[2]

மற்றொரு கோயில்

இவ்வூரிலுள்ள மற்றொரு சிவன் கோயில் தேவார வைப்புத்தலமான தேவநாதசுவாமி கோயில் ஆகும்.

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads