பொட்டாசியம் மெத்தாக்சைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொட்டாசியம் மெத்தாக்சைடு (Potassium methoxide) என்பது CH3KO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மெத்தனாலின் ஆல்காக்சைடுக்கு எதிரயனியாக பொட்டாசியம் இடம்பெற்றிருக்கும் இச்சேர்மம் ஒரு வலிமையான காரமாகவும், ஒரு வினையூக்கியாக மாற்றுயெசுத்தராக்கல் வினையிலும், குறிப்பாக பயோடீசல் உற்பத்திக்கான வினையூக்கியாகவும் பொட்டாசியம் மெத்தாக்சைடு பயன்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

ஆய்வக அளவில் பொட்டாசியம் மெத்தாக்சைடை உலோக பொட்டாசியம் மற்றும் மெத்தனால் ஆகியவற்றை வினையில் ஈடுபடுத்தி சமமான அளவு ஐதரசனை வெளியிடுவதன் மூலம் அடைய முடியும் .[1].

Kaliummethanolat aus Kalium und Methanol
Kaliummethanolat aus Kalium und Methanol

.

பொட்டாசியம் ஐதரைடு போன்ற உலோக ஐதரைடுகள் மெத்தனாலுடன் வினைபுரிந்தாலும் பொட்டாசியம் மெத்தாக்சைடு உருவாகிறது. ஆனால் இத்தயாரிப்பு முறை குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

Kaliummethanolat aus Kaliumhydrid und Methanol
Kaliummethanolat aus Kaliumhydrid und Methanol

மெத்தனாலுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு ஈடுபடும் வெப்ப உமிழ்வினை பொட்டாசியம் மெத்தனாலேட்டு மற்றும் தண்ணீருக்கு ஒரு சமநிலை வினைக்கு வழிவகுக்கிறது. அதிகமாக எரியக்கூடிய ஐதரசன் வாயு உருவாவதைத் இவ்வினை தவிர்க்கிறது. தொடர்ச்சியான செயல்முறையில் உருவாகும் நீரை நிரந்தரமாக அகற்ற வேண்டும்[2].

Kaliummethanolat aus Kaliumhydroxid und Methanol
Kaliummethanolat aus Kaliumhydroxid und Methanol

நீரை முழுமையாக அகற்றுவது வினைமாற்றத்திற்குரிய முக்கியமான நடவடிக்கையாகும். பொட்டாசியம் ஐதராக்சைடின் குறிப்பிடத்தகுந்த நீருறிஞ்சும் தன்மை காரணமாகவும் . பொட்டாசியம் ஐதராக்சைடில் சுமார் 10% தண்ணீர் கலந்துள்ளதாலும் நீரை முழுமையாக அகற்றுவது வினை மாற்றத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.[3].சோடியம் ஐதராக்சைடுடன் ஒப்பிடும்போது மெத்தனாலில் பொட்டாசியம் ஐதராக்சைடு கணிசமான கரைதல் வீதத்தில் கரைவது இங்கு சாதகமானது.

குளோர் கார செயல்முறையில் பெறப்பட்ட பொட்டாசியம் இரசக் கலவையுடன் மெத்தனால் சேர்ந்த வினை கலவையை சிதைவுக்கு உட்படுத்தி பேரளவில் பொட்டாசியம் மெத்தாக்சைடு தயாரிக்கப்படுகிறது. குளோர் காரம் என்பது பொட்டாசியம் குளோரைடை இரசக்கலவை செயல் முறையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தும் முறையாகும். விளைபொருளாக உருவாகும் மெத்தனாலிலுள்ள பொட்டாசியம் மெத்தாக்சைடில் தனிமநிலை பாதரசம் கலந்திருக்கும். இதை மீநுண்வடிகட்டல் முறையில் பிரித்தெடுக்க வேண்டும்[4]. காய்ச்சி வடித்தல் மூலம் திண்ம பொட்டாசியம் மெத்தாக்சைடு பெறப்படுகிறது. ஏனெனில் அவற்றின் எளிமையான உற்பத்தி மற்றும் சிறப்பாக கையாளப்பட வேண்டிய இரசாயன நோக்கங்களுக்காக பொட்டாசியம் மெத்தாக்சைடு எடையளவில் 25 முதல் 32% அளவுக்கு கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்ச்சியாக இரசக் கலவை செயல்முறையிலிருந்து திரும்பத் திரும்பப் பெறப்படுகிறது. கார உலோக ஆல்காக்சைடுகளை தயாரிக்க உதவும் இந்த செயல்முறைக்கு தேவையான சோடியம் ஐதராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியனவற்றை தயாரிப்பதற்கு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக பயனளிக்கும் சிறப்பான சவ்வு செயல்முறையால் இரசக்கலவை செயல்முறை கைவிடப்பட்டு விட்டது[5].

Remove ads

பண்புகள்

பொட்டாசியம் மெத்தாக்சைடு வெள்ளை முதல் மஞ்சள் வரையான ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும். மணமற்ற படிக தூளான இது தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது..இதிலிருந்து பெறப்பட்ட நீரிய கரைசல்கள் வலிமையான காரங்களாக அரிக்கும் தன்மையுடன் உள்ளன. இந்த வேதிப்பொருள் 70 ° செல்சியசு வெப்பநிலையில் தன்னிச்சையாக தீப்பற்றி எரியக்கூடிய ஒரு திண்மமாக வகைப்படுத்தப்படுகிறது[6].

பயன்கள்

கார்பன் மோனாக்சைடுடன் சேர்க்கப்பட்டு மெத்தனாலை கார்பனைலேற்றம் செய்து மெத்தில் பார்மேட்டு எனப்படும் மெத்தில் மெத்தனோயேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையை பொட்டாசியம் மெத்தாக்சைடு போன்ற வலுவான காரங்கள் வினையூக்கம் செய்கின்றன[7][8].

பொட்டாசியம் மெத்தாக்சைடின் முக்கிய பயன்பாடு பயோடீசல் தொகுப்பில் அடிப்படை மாற்று எசுத்தராக்கல் வினையில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுவதாகும்.. காய்கறி மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் டிரைகிளிசரைடுகள் கார உலோக மெத்தனோலேட்டுகள் முன்னிலையில் மெத்தனாலுடன் வினைபுரிந்து தொடர்புடைய கொழுப்பு மெத்தில் எசுத்தர்களை உருவாக்குகின்றன[9][3].

பொட்டாசியம் மெத்தாக்சைடு சோடியம் மெத்தாக்சைடுடன் ஒப்பிடுகையில் அதிக கொழுப்பு சோப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. மற்றும் பொட்டாசியம் மெத்தாக்சைடு அதிக அளவிலும் விளைபொருளை கொடுக்கிறது. கனோலா எண்ணெயிலிருந்து பயோடீசல் உற்பத்திக்கு 1..59% பொட்டாசியம் மெத்தாக்சைடின் எடையில் 50 ° செல்சியசு வினை வெப்பநிலை மற்றும் 4.5: 1 என்ற மெத்தனால் / எண்ணெய் விகிதம் தேவைப்படுகிறது. பயோடீசல் உற்பத்தி 95.8%, ஆனால் அதில் கொழுப்பு அமிலம் 0.75% எடையாகும்[10].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads