பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

விரைவான உண்மைகள் பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

பொய்யூர் என்று வழங்கப்படும் இவ்வூர் வடக்குப் பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர் என்று இரண்டாக உள்ளது. நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஈச்சங்குப்பம்-அக்கரப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் நந்திநாதேசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads