ம. கல்லுப்பட்டி (திருச்சி மாவட்டம்)
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ம.கல்லுப்பட்டி அல்லது மருங்காபுரி கல்லுப்பட்டி , இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள ஊராகும். முன்பு மணப்பாறை வட்டத்தில் இருந்த இவ்வூர் தற்பொழுது மணப்பாறையிலிருந்து பிரிக்கப்பட்ட மருங்காபுரி வட்டத்தில், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ம.கல்லுப்பட்டி சுருக்கமாக கல்லை எனவும் அழைக்கப்படுகிறது. இதன்
- அஞ்சல் குறியீட்டு எண் : 621305 (ம.கல்லுப்பட்டி கிளை அஞ்சலகம் ),
- தொலைபேசி முன் இணைப்பு எண்:04332 (மணப்பாறை )மற்றும்
- வாகன குறியீட்டு எண்:TN 45Z (மணப்பாறை ).
Remove ads
அமைவிடம்
திருச்சி மாவட்டம்,மருங்காபுரி வட்டம்,மணப்பாறை சட்டமன்றத் தொகுதி,கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் NH-45Bல்( வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் 38 ) திருச்சியிலிருந்து தெற்கில் 50கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கில் 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ம.கல்லுப்பட்டியானது வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-38ல் அமைந்திருப்பதால் இது இதன் அருகில் உள்ள முக்கிய ஊர்களான தெ .இடையபட்டி(ஊராட்சி) மற்றும் மருங்காபுரி ,துவரங்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு ம.கல்லுப்பட்டி நுழைவுவாயிலாகவும், மருங்காபுரி,வெட்டுக்காடு,மல்லிகைப்பட்டி,யாகபுரம்,குளவாய்பட்டி,டி.இடையபட்டி, நெல்லிப்பட்டி, தெ.ஆண்டிப்பட்டி,சேத்துப்பட்டி,முத்தாழ்வார்பட்டி ஆகிய ஊர்கள் சந்திக்கும் சந்திப்பு முனையமாகவும் ம.கல்லுப்பட்டி('கல்லை')திகழ்கிறது.
Remove ads
முத்துமாரியம்மன் கோவில்
இங்கு பிரசித்திபெற்ற ம.கல்லுப்பட்டி முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வருடாவருடம் இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவானது மிகவும் பிரபலமானதாகும். இக்கோவில் திருவிழாவானது எம்.கல்லுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களான டி.இடையபட்டி, தாழம்பாடி, மருங்காபுரி மற்றும் இதனுள் அடங்கும் சிறிய கிராமங்கள் என பதினெட்டு ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம் அழகிய யானையின் தோற்றத்தில் பசுமையான மல்லிகைமலை அமைந்துள்ளது. இந்த மல்லிகைமலையின் அடிவாரத்தில் தமிழகத்தின் 100-வது சமத்துவபுரம் அமைந்திருப்பது சிறப்பு.
Remove ads
அலுவலகங்கள்
இங்கு மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சி மன்றங்களுக்கான தலைமை அலுவலகமான
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- தோட்டக்கலைத்துறை அலுவலகம்
- வேளாண்மைத்துறை அலுவலகம்,
- கால்நடை மருந்தகம்,
- வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,
- துணை மின் அலுவலகம்,
- துணை அஞ்சல் அலுவலகம்(621305)
- வட்டார புள்ளியியல் மையம்
- கிராம சேவை மையம்
- அரசு இ - சேவை மையம்
ஆகிய அலுவலகங்கள் ம.கல்லுப்பட்டியில் அமைந்துள்ளன.மேலும்
- மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகமும் ம.கல்லுப்பட்டியில் அமைக்கப்பட்டு 17.09.2013 முதல் செயல்பட்டு வருகிறது.
ஆலயங்கள்
- அருள்மிகு ம.கல்லுப்பட்டி முத்துமாரியம்மன் ஆலயம்
- அருள்மிகு ம.கல்லுப்பட்டி அய்யனார் கோவில்
- அருள்மிகு பெருமாள்கோவில்,ம.கல்லுப்பட்டி
- அருள்மிகு அரசமரத்துப் பிள்ளையார் கோவில்,ம.கல்லுப்பட்டி
- அருள்மிகு சாயி பாபா திருக்கோவில், ம.கல்லுப்பட்டி
அருகில் உள்ள ஊர்கள்
- மருங்காபுரி (ஊராட்சி ) - 03 கி.மீ.
- மணப்பாறை (நகராட்சி) - 27 கி.மீ.
- பொன்னம்பட்டி (பேரூராட்சி) - 10 கி.மீ.
- திருச்சி (மாநகராட்சி) - 50 கி.மீ.
- புதுக்கோட்டை (நகராட்சி) - 50 கி.மீ.
- மதுரை (மாநகராட்சி) - 80 கி.மீ.
தொடர்வண்டி நிலையங்கள்
- மணப்பாறை (நகராட்சி) - 27 கி.மீ.
- திருச்சி (மாநகராட்சி) - 50 கி.மீ.
- வானூர்தி நிலையங்கள்:
விமான நிலையங்கள்
- திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் - 57 கி.மீ.
- மதுரை விமான நிலையம்-88 கி.மீ.
Remove ads
கல்வி நிறுவனங்கள்
- ஶ்ரீஹயக்கிரீவர் இண்டர் நேசனல் பள்ளி (ம.கல்லுப்பட்டி)
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (ம.கல்லுப்பட்டி)
- அரசு மேல்நிலைப்பள்ளி, மருங்காபுரி
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
