மகாத்மா புலே அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாத்மா புலே அருங்காட்சியகம் (Mahatma Phule Museum) இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். [1] இது 1890 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் அது புனே தொழில்துறை அருங்காட்சியகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது, பின்னர், டொலாட் ஜேம்ஸ் மக்காய் எனப்படுகின்ற 11ஆம் பிரபு லார்ட் பெயரால் இந்த அருங்காட்சியகம் லார்ட் ரே அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றம் பெற்றது.1968 ஆம் ஆண்டில் இதற்கு மகாத்மா புலே அருங்காட்சியகம் என மறுபெயர் சூட்டப்பட்டது. [2]

Remove ads

பிரிவுகள்

இந்த அருங்காட்சியகத்தில் சில படங்கள், வரைபடங்கள், மாதிரிகள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் அறிவியல் பொருள்களின் மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்ட பிரிவுகள் உள்ளன. தொழில் மற்றும் பொறியியல், புவியியல் மற்றும் தாதுக்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்கள், விவசாயம், வனவியல், இயற்கை வரலாறு மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களில் முகலாய மற்றும் மராட்டிய காலத்தைச் சேர்ந்த ஆயுதங்கள் உள்ளன. புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோட்டைகளை விவரிக்கும் விளக்கப்படங்களும் இங்கு உள்ளன. இயற்கை வரலாற்றுப் பிரிவில் பதனம் செய்து வைக்கப்பட்ட பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள் மற்றும் மீன்களின் சேகரிப்புகள் உள்ளன. தொழில்துறை பிரிவில் இந்திய நீர்மின் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் அறிவியல் விவசாயத்தை விளக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு முறைகள் ஆகியவற்றை விளக்கும் காட்சிப் பொருள்கள் அமைந்துள்ளன. [2]

Remove ads

நூலகம்

இந்த அருங்காட்சியகம் அதன் ஆரம்ப காலம் முதலே ஒரு நூலகம் இயங்கி வருகிறது. [3] இந்த நூலகத்தில் பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய நூலகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் அருங்காட்சியகம் பற்றிய நூல்களும் அடங்கும். [2]

பி.வி.கார்பூர்

மகாத்மா புலே அருங்காட்சியகத்தின் தற்போதைய நிர்வாகியான ராஜீவ் விலேகர் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் கூறியுள்ள மேற்கோள் பின்வருமாறு அமையும்: "1930 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை இந்த அருங்காட்சியகத்தின் காப்பாட்சியாளராக பி.வி.கார்பூர் இருந்தார். அருங்காட்சியகத்திற்கு அவர் செய்த பங்களிப்புகள் மகத்தானவை ... இங்குள்ள ஒரு மண்டபம் அவரது நினைவாக அவரது பெயரைக் கொண்டு அமைந்துள்ளது ". [2] அமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற டோலிடோ பிளேட் என்ற இதழில் காப்பாட்சியர் பி.வி.கார்பூர் 1948 மார்ச்சில் டோலிடோவிற்கு விஜயம் செய்ததைப் பற்றிக் கூறுகிறது. அந்தச் செய்தியில் இந்த அருங்காட்சியகம் "லார்ட் ரே மகாராஷ்டிரா தொழில்துறை அருங்காட்சியகம், பம்பாய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் "வேளாண்மை, பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றை பள்ளி செல்லாத இல்லாத மக்களுக்கு நவீன முறைகளில் கற்பிப்பதாகும்" என்று கார்பூர் குறிப்பிடுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்பூர் ஒரு வருட கால சர்வதேச சுற்றுப்பயணத்தில் இருந்ததாகவும், அந்த பயணத்தின்போது அவர் ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார் என்றும் அது தெரிவிக்கிறது. [4]

ஸ்ரிஷ்டின்யான் இதழ்

இந்த அருங்காட்சியகம் அறிவியல் மாத இதழ் ஒன்றினை வெளியிட்டு வருகிறது. அதன் பெயர் ஸ்ரிஷ்டின்யான் [5] என்பதாகும். இது ஒரு எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்து, அறிவியல் வளர்ச்சியை விளக்குகிறது. [2] இது 1928 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முன்னோடி மராத்தி பிரபலமான அறிவியல் மாத இதழாகக் கருதப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல துறைகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த இதழுக்கு பிரபலமான கட்டுரைகளை வழங்கி வருகின்கிறார்கள்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads