மகாமாயா நகர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாமாயா நகர் மாவட்டம் (Hindi: महामायानगर ज़िला, Urdu: مہامایا نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று. இது முன்பு ஹத்ரஸ் மாவட்டம் என அழைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹாத்ரஸ் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 1800.1 கி.மீ.². கௌதம புத்தரின் தாயான மகாமாயாவின் பெயரால் இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.[1]
Remove ads
வரலாறு
மகாமாயா நகர் மாவட்டம் 3 மே, 1997ல் அலிகார் மற்றும் மதுரா மாவட்ட பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஹாத்ரஸ் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,565,678.[2] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 318வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 851 inhabitants per square kilometre (2,200/sq mi).[2] மேலும் மகாமாயா நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.19%.[2] மகாமாயா நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 870 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மகாமாயா நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads