மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு என்பது முசோரியில் அமைந்துள்ள ஓர் மலை வாழிடம் ஆகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு திபெத்தியர்கள் அதிக அளவில் குடியேறியுள்ளனர்.
Remove ads
அமைவிடம்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இந்திய நிர்வாக சேவைகள் நிறுவனமான, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் அமைந்துள்ளது. இப்பள்ளத்தாக்கினுள் திபெத்திய மடாலயம் ஒன்றும் உள்ளது.[1] இதனை கதிபாவிலிருந்து தெளிவாகக் காணலாம்.[2][3]
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு முசோரியின் தலாய் மலையின் [4] மேற்கே அமைந்துள்ளது. இங்கிருந்து ஜான்பூர் [5] மற்றும் நாக்-திப்பா [6] மலைத்தொடர்கள் தெளிவாகத் தெரியும்.
வரலாறு
அக்டோபர் 18, 1929இல் மகாத்மா காந்தி முசோரியில் ஐரோப்பிய நகராட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார். இந்த நேரத்தில் இவர் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிலுள்ள பிர்லா இல்லத்தில் தங்கினார்.[7][8][9]
திபெத்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1959இல் இளம் தலாய் லாமா மகிழ்ச்சிப் பள்ளத்தாக்குக்கு நாடுகடத்தப்பட்டார்.[10][11] ஏப்ரல் 1960இல், மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு மலை நகரமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்குச் சென்றார்.[12][13] திபெத்திய அரசாங்கம் எண்பது அதிகாரிகளை நாடுகடத்தியது.[14]
இதன் தொடர்ச்சியாகப் பல திபெத்தினர் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் தங்கினர். இங்கு பெளத்த கோயில் மற்றும் திபெத்தியப் பாணியிலான வீடுகளைக் காணலாம்.[15][16] 2016ஆம் ஆண்டு நிலவரப்படி, மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு 5000 திபெத்திய அகதிகளின் இருப்பிடமாக உள்ளது.[17][18]
Remove ads
சிறப்பியல்புகள்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இந்திய நிர்வாக சேவை நிறுவனமான லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் உள்ளது.[19][20][21] இங்கு திபெத்திய கோயில்களும்[22] நகராட்சி தோட்டமும் உள்ளது. பள்ளத்தாக்கின் முடிவில் மேக முடிவு[23] உள்ளது; இது முசோரியின் புவியியல் எல்லையாக உள்ளது. கதிபாவ்ன் பூங்காத் தோட்டமும் இங்கு உள்ளது.[24] மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜார்ஜ் எவரெஸ்டின் வீட்டினை ஒருபுறமும்[25] மறுபுறம் இமயமலை எல்லைகளுடன் முசோரி முழுவதையும் காணலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads