தேராதூன் மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தேராதூன் மாவட்டம்
Remove ads

தேராதூன் மாவட்டம் (Dehradun district), (ஒலிப்பு) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் தேராதூன் நகரமாகும்.

விரைவான உண்மைகள் தேராதூன் மாவட்டம், நாடு ...
Remove ads

அமைவிடம்

இம்மாவட்டத்தின் வடகிழக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் டெக்ரி கார்வால் மாவட்டம் தென்கிழக்கில் பௌரி கார்வால் மாவட்டம், தெற்கில் அரித்துவார் மாவட்டம், தென்மேற்கில் சகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், மேற்கில் சிர்மௌர் மாவட்டம், இமாசல பிரதேசம், வடமேற்கில் சிம்லா மாவட்டம், இமாசல பிரதேசம் அமைந்துள்ளது.

நிர்வாகம்

இம்மாவட்டம் ஆறு வருவாய் வட்டங்களும், ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும், பதினேழு நகரங்களையும், 764 கிராமங்களையும் கொண்டுள்ளது. உத்தராகண்டம் மாநிலத்தில், இம்மாவட்டம் அரித்துவார் மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.[1] டேராடூன் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள், ரிஷிகேஷ், மிசௌரி, லண்டௌர், மற்றும் சக்ரதா ஆகும்.

நிறுவனங்கள்

தேசியத் தலைநகர் புதுதில்லியிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் தேராதூன் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம், இந்திய நில அளவை ஆணையம், இந்திய பெட்ரேலியக் கழகம் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளது. மேலும் டேராடூன் சட்டக் கல்லூரி, வன ஆராய்ச்சி நிறுவனம், இராஷ்டிரிய இந்தியன் இராணுவக் கல்லூரி மற்றும் இராணுவ அகாதமி மற்றும் பன்னாட்டுப் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டதில் இயங்குகிறது.

வேளாண்மை

இம்மாவட்டம் தேயிலை, பாசுமதி அரிசி மற்றும் பழத்தோட்ட வேளாண்மைக்கு புகழ் பெற்றது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,96,694 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 892,199 மற்றும் பெண்கள் 804,495 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 902 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 549 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.25% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.40% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 78.54% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,01,652 ஆக உள்ளது.[2]

அரசியல்

இம்மாவட்டம் சக்ரதா (தலித்), விகாஸ்நகர், சகாஸ்பூர், தரம்பூர், இராய்பூர், இராஜ்பூர் ரோடு (தலித்), டேராடூன் கண்டோன்மெண்ட், மிசௌரி, தோய்வாலா, ரிஷிகேஷ் என பத்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

Remove ads

தட்ப வெப்பம்

தேராதூனில் ஆண்டு முழுவதும் சீரான வானிலை காணப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் டேராடூன் ...
Remove ads

மொழிகள்

இப்பகுதிக்குரிய கார்வாலி மொழியுடன், இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • டெஹ்ராடூன் உயிரியல் பூங்கா
  • கலங்கா நினைவுச்சின்னம்
  • ராபர்ஸ் குகை (குச்சுபனி)
  • வன ஆராய்ச்சி நிறுவனம்
  • முசோரி
  • லக்ஷ்மன் சித்த கோயில்
  • தப்கேஷ்வர் கோயில்
  • சந்தலா தேவி கோயில்
  • மைண்ட்ரோலிங் மடாலயம்[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads