மண்முனைப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்முனைப் பாலம் (Manmunai Bridge) என்பது, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது மட்டக்களப்பு வாவியின் படுவான் கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் வகையில் அந்த வாவிக்குக் (கடல் நீரேரி அல்லது கடற்காயலுக்குக்) குறுக்காக அமைந்துள்ளது. இந்தப் பாலமே மட்டக்களப்பின் கரையோரத்தைத் தலைநிலத்துடன் இணைத்த முதல்[மேற்கோள் தேவை] பாலமாகும். மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான் கரையில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளுக்குச் செல்வதற்கான 30 கிலோமீட்டர் தூரத்தைக் குறைப்பதற்கான ஒரு மாற்று வழியாக இது விளங்குகிறது. இந்தப் பாலத்தினூடாகக் கொக்கட்டிச்சோலைப்பகுதி மக்கள் இலகுவாகவும், மிக விரைவாகவும் மட்டக்களப்பு நகரத்துக்கு சென்றுவர வசதியேற்பட்டுள்ளது. முன்னர் சிறிய படகுகள் மூலம் கடல் நீரேரி ஊடாகவே போக்குவரத்து இடம்பெற்றது.[2]
இலங்கைக்கும் சப்பானுக்கும் இடையிலான இராசதந்திர உறவின் 60 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், சப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை (Japan International Cooperation Agency) இலங்கை அரசுக்கு வழங்கிய 1.206 மில்லியன் யென்களைப் பயன்படுத்தி இந்தப் பாலமும் தரைப்பாலமும் கட்டப்பட்டன.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads