மதுரை மையச் சிறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை மையச் சிறை (Madurai Central Prison) தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையாகும். இது 1865-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு 1252 கைதிகளை வைக்கும் வசதி உள்ளது. இச் சிறைச்சாலை 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இச்சிறையில் பெண் சிறைக் கைதிகளின் வளாகம் உள்ளது. இச்சிறை வளாகத்துள் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (IGNOU) மையம் உள்ளது. இப்பல்கலைககழகம் நடத்தும் படிப்புகளில் கைதிகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் (அதற்கான செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது). அவர்களுக்கான பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளும் இவ்வளாகத்துள்ளாகவே நடத்தப்படுகின்றன[1].
Remove ads
இடமாற்றம்
மதுரையிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாதவூர் அருகே அமைந்த இடையபட்டி கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தில் அனைத்து வசதிகளுடன் மதுரை மத்திய சிறை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் கட்டுமான பணி நடக்க உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. [2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads