மனித நேயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பும்,கருணையும், சமூக நுண்ணறிவும் இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.[1]
Remove ads
தமிழ் மொழியில் மனித நேயம்
"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - திருவள்ளுவர்
கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறுகிறார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார்
வரலாற்று பின்னணி
கன்ஃபூசியஸ் கோட்பாடு
கன்ஃபூசியஸ் மனித நேயத்தை (ரென்) "பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது" என்றார். மேலும் "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" என்றார்.[2] மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது.[3]
கிரேக்க கோட்பாடு
கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை. மாறாக அன்பும் கருணையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்.
இஸ்லாமியத்தில் மனிதநேயம்
நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்". (அல்-குர்ஆன்:5:32) [4]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (3015) [5]
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[5]
Remove ads
மனித நேயத்தின் பலம்
அன்பு
அன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது இரு நபர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
இதிகாசங்களில் மனித நேயம்
இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கபட்டன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
மனித நேயம் காத்த மனிதர்கள்
மனித நேய பிரச்சனைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads