மன்ஹாட்டன் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்ஹாட்டன் பாலம் நியூயார்க் நகரத்தின் கிழக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் ஆகும். இது மன்ஹாட்டனின் தென் (கீழ்)பகுதியையும் புரூக்ளினின் நகரமையத்தையும் இணைக்கின்றது. லியோன் முவாசெய்ஃப் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலம் 6,855 அடி (2,089 m) நீளமானது. இது மன்ஹாட்டன் தீவையும் நீள் தீவையும்இணைக்கும் நான்கு வாகனப் போக்குவரத்து பாலங்களில் ஒன்றாகும்; அண்மித்த புரூக்ளின் பாலம் இதற்கு மேற்கே உள்ளது, மற்ற இரு பாலங்கள் (குயின்சுபரோ பாலம், வில்லலியம்சு பாலம்) வடக்கே உள்ளன. [5]
1898 இல் இந்தப் பாலத்தைக் கட்ட முன்மொழியப்பட்டது; அப்போது இது "பாலம் எண். 3" என குறிப்பிடப்பட்டிருந்தது. 1902-இல் இதற்கு மன்ஹாட்டன் பாலம் என பெயரிடப்பட்டது. பாலத்தின் தொங்கு கோபுரங்களுக்கான அடித்தளங்கள் 1904இல் முடிவுற்றன. திசம்பர் 31, 1909இல் மன்ஹாட்டன் பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு முதல் அமிழ் தண்டூர்தி போக்குவரத்து துவங்கியது; 1915-ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகர சப்வே தொடரிகள் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. 1929-இல் அமிழ் தண்டீர்தி சேவைகள் நிறுத்தப்பட்டன. தவிரவும் சப்வே போக்குவரத்தினால் ஒரு பக்கமாக ஏற்பட்ட சாய்வை சரிசெய்ய 1982 - 2004 காலகட்டத்தில் விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads