மராஅம் (மரம்)
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்த செய்தி நமக்குத் தெரியும்.
மராஅம் மலர்
- மராஅம் பூவின் நிறம் வெள்ளை.[1]
- சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும்.[2]
- பலராமன் போல் வெண்ணிறம் கொண்டது.[3]
- மணம் மிக்கது.[4]
- பூ வலமாகச் சுழன்றிருக்கும்.[5]
- குராலொடு மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும்.[6]
பயன்பாடு
- குவித்து விளையாடும் பூ.[7]
- கூந்தலில் சூடும் பூ.[8]
- மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்).[9]
- கானவன் மராஅம் மரத்தில் ஏறிக்கொண்டு யானைமேல் வேல் எறிவான்.[10]
- பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது.[11]
- கொற்றவை உகந்த மலர். அதிரல், பாதிரி, மராஅம் மலர்கள் அணங்கு (கொற்றவை) மேல் உதிர்ந்து அவளைப் பராவும் (துதிபாடும்).[12]
- ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர்.[13]
Remove ads
இவற்றையும் காண்க
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads