மலேசிய தற்காப்பு அமைச்சு

இராணுவ தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு From Wikipedia, the free encyclopedia

மலேசிய தற்காப்பு அமைச்சுmap
Remove ads

மலேசிய தற்காப்பு அமைச்சு (மலாய்: Kementerian Pertahanan Malaysia (KEMENTAH); ஆங்கிலம்: Defence Ministry of Malaysia) (MINDEF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். நாட்டின் இறையாண்மைக்கும்; நாட்டு மக்களின் தற்காப்பிற்கும்; பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் தடம் பதிக்கிறது.

விரைவான உண்மைகள் அமைச்சு மேலோட்டம், அமைப்பு ...

மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர், தன் செயல்பாடுகளைத் தற்காப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.

Remove ads

பொறுப்பு துறைகள்

Remove ads

வரலாறு

மலேசிய தற்காப்பு அமைச்சு, 1957 ஆகத்து 31-இல் நிறுவப்பட்டது. கோலாலம்பூரில் இருந்த புரோக்மேன் சாலையில் (Brockman Road) அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. புரோக்மேன் சாலை இப்போது டத்தோ ஓன் சாலை (Jalan Dato' Onn) என்று அழைக்கப்படுகிறது.[2]

இந்தக் கட்டடத்தில் 1957 ஆகத்து 31-ஆம் தேதி முதல் 1970 செப்டம்பர் 22-ஆம் தேதி வரை பணியாற்றிய முதல் தற்காப்பு அமைச்சர் மறைந்த துன் அப்துல் ரசாக் உசேன் (Tun Abdul Razak bin Datuk Hussein). அவரின் அலுவலகமும் அதே கட்டடத்தில்தான் இருந்தது.[2]

இராணுவ வளாகம்

தற்காப்பு அமைச்சின் முதல் கட்டடம் MYR 122,000.00 செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டது. 1960 மார்ச் 18-ஆம் தேதி துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடாங் தேம்பாக் சாலையில் (Jalan Padang Tembak) கட்டப்பட்ட மற்றொரு கட்டடத்தில் மலேசிய முப்படைகளின் தலைவர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[3]

நான்கு மாடிகளில் ஆறு தொகுதிகள் கொண்ட ஒரு வளாகம் அங்கு கட்டப்பட்டது. MYR 2 மில்லியன் செலவிலான அந்தக் கட்டடம்; 1967 ஏப்ரல் 6-ஆம் தேதி துங்கு அப்துல் ரகுமான் புத்திரா (Tunku Abdul Rahman Putra) அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.[3]

புதிய கட்டடம்

மலேசியாவில் இருந்து பிரித்தானிய துருப்புக்கள் திரும்பி ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பிறகு, நாட்டின் தற்காப்பை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கான பொறுப்பு, தற்காப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்காப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர, தற்காப்பு அமைச்சகத்திற்கு ஒரு புதிய கட்டடத்தைக் கட்டித் தருவதற்கு மலேசிய அரசு முடிவு செய்தது. அந்தக் கட்டடத்திற்கு, 10 மார்ச் 1982-இல், அப்போதைய தற்காப்பு துணை அமைச்சர் டத்தோ அபுபக்கர் பின் டத்து அபாங் அஜி முசுதபா (Dato' Abu Bakar bin Datu Abang Abang Haji Mustapha) அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

விசுமா பெர்தகானான்

தற்சமயம் அந்தப் புதிய கட்டடம் கோலாலம்பூரில் உள்ள பாடாங் தேம்பாக் சாலையில் அமைந்துள்ளது. MYR 144 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 1985-ஆம் ஆண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த 20 மாடிக் கட்டடம் விசுமா பெர்தகானான் (WISMA PERTAHANAN) என்று அழைக்கப்படுகிறது.

மலேசிய தற்காப்பு அமைச்சு, தற்காப்பு அமைச்சரால் வழிநடத்தப் படுகிறது; மற்றும் அந்த அமைச்சருக்கு துணை அமைச்சர்களால் உதவி செய்யப்படுகிறது. தற்காப்பு அமைச்சின் அமைப்பு இரண்டு முக்கிய சேவைகளைக் கொண்டுள்ளது.

  • பொதுச் செயலாளர் தலைமையில் பொது சேவை (Public Service)
  • ஆயுதப் படைகளின் தலைவர் தலைமையில் மலேசிய ஆயுதப் படைகள் (Malaysian Armed Forces)
Remove ads

அமைப்பு

  • தற்காப்பு துறை அமைச்சர்
    • தற்காப்பு துறை துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • உள் தணிக்கை மற்றும் புலனாய்வு பிரிவு
          • மலேசிய ஆயுதப்படை மன்றத்தின் செயலகம்
          • முக்கிய செயல்திறன் காட்டி அலகு
          • சட்டப் பிரிவு
          • மூலோபாய தொடர்பு அலகு
          • ஒருமைப்பாடு அலகு
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
          • அபிவிருத்தி பிரிவு
          • கொள்முதல் பிரிவு
          • மலேசிய ஆயுதப் படைகளின் பட்டியல் ஆணையம்
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
          • கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
          • தற்காப்பு தொழில் பிரிவு
          • தற்காப்பு ரிசர்வ் டிப்போ
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள மேலாண்மை பிரிவு
          • தகவல் மேலாண்மை பிரிவு
          • நிதி பிரிவு
          • கணக்கு பிரிவு
          • நிர்வாகப் பிரிவு
        • தற்காப்பு படைகளின் தலைவர்
          • இராணுவத் தளபதி
          • கடற்படைத் தலைவர்
          • விமானப்படைத் தலைவர்
          • கூட்டுப் படைத் தளபதி
          • பொது தற்காப்பு புலனாய்வு இயக்குநர்
          • தலைமைத் தளபதி மலேசிய ஆயுதப்படை தலைமையகம்

கூட்டரசு நிறுவனங்கள்

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads