மலேசிய தேசிய கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய தேசிய கட்சி (மலாய்: Parti Bangsa Malaysia; (PBM) ஆங்கிலம்: மலேசிய தேசிய கட்சி; சீனம்: 全民党) என்பது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மத்திய-வலதுசாரி அரசியல் கட்சி. சரவாக் தொழிலாளர் கட்சி (Sarawak Workers Party) என நிறுவப்பட்ட இந்தக் கட்சி, நவம்பர் 2021-இல் மலேசிய தேசிய கட்சி என பெயர் மாற்றம் கண்டது.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சி ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.[2]
Remove ads
வரலாறு
தொடக்க காலத்தில், சரவாக் மாநிலத்தில் சரவாக் தொழிலாளர் கட்சி (Parti Pekerja Sarawak) (SWP) எனும் ஒரு கட்சி இருந்தது. இந்தக் கட்சி 2012-இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சி சரவாக் மக்கள் கட்சியில் (மலாய்: (Parti Rakyat Sarawak) (PRS); ஆங்கிலம்: (Sarawak Peoples' Party) இருந்து பிளவுபட்ட கட்சியாகும்.[3]
சரவாக் மக்கள் கட்சியில் அதிருப்தி அடைந்த தலைவர் சிங் சி உவா (Sng Chee Hua) என்பவரால் மலேசிய தேசிய கட்சி எனும் ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டது. முதலில் அந்தக் கட்சி ’சபா மக்கள் முன்னணி’ (Sabah People's Front) என்று அழைக்கப்பட்டது. பாரிசான் நேசனல் கூட்டணியின் நட்புக் கட்சியாக இருந்தது.[4]
பின்னர் 2013-இல் சரவாக் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி லாரி வேய் சியென் (Larry Sng Wei Shien) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரை பாரிசான் நேசனல் கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை.[5] [6]
இருப்பினும் பற்பல அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னர் 8 சனவரி 2022-இல், லாரி வேய் சியென் அதிகாரப்பூர்வமான தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.[7][8]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads