மலேசியாவின் அரசியல்

மலேசிய அரசாங்கம் From Wikipedia, the free encyclopedia

மலேசியாவின் அரசியல்
Remove ads

மலேசியாவின் அரசியல், (மலாய்: Politik Malaysia; ஆங்கிலம்: Politics of Malaysia; சீனம்: 马来西亚政治); என்பது ஒரு மக்களாட்சி அரசியலமைப்பில் ஒரு முடியாட்சியின் கட்டமைப்பு ஆகும். இதில் மலேசியப் பேரரசர் (Yang di-Pertuan Agong) அரசின் தலைவராகவும்; மலேசியப் பிரதமர் (Prime Minister of Malaysia) அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளனர்.

Thumb
மலேசிய நாடாளுமன்றம்

நிருவாக அதிகாரம் (Executive Power) எனும் உயர்மட்ட அதிகாரத்தை மத்திய அரசும்; மற்றும் 13 மாநில அரசுகளும் இணைந்து பயன்படுத்துகின்றன. சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய நாடாளுமன்றத்திற்கும் மற்றும் 13 மாநில சட்டமன்றங்களுக்கும் உள்ளது.

இதில் நீதித்துறை சுயேச்சையாக இயங்கக் கூடியது. இருப்பினும் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில், நிருவாக அதிகாரமானது ஒரு குறிப்பிட்ட அளவில் செல்வாக்கையும் கொண்டுள்ளது.

Remove ads

மலேசிய அரசியலமைப்பு

மலேசியாவின் அரசியலமைப்பு முறையும்; அரசாங்க நிருவாக அமைப்பு முறையும் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை (Westminster System) அடிப்படையாகக் கொண்டது.[1]

வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை என்பது ஐக்கிய இராச்சியத்தின் அரசியலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையாகும். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அவைகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து செயல்படுவதால் இந்தப் பெயர் வரலாயிற்று.[2][3]

Remove ads

மலேசிய நாடாளுமன்றம்

Thumb
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம்

மலேசியா ஒரு காலத்தில் பிரித்தானிய காலனி ஆட்சியின் கீழ் இருந்ததால், இப்போதைய அரசாங்க அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையைப் பின்பற்றுகிறது.[4]மலேசிய நாடாளுமன்றம் என்பது மலேசியாவின் ஆக உயர்ந்த சட்டப் பேரவையாகும். சட்டங்களை இயற்றுவதும், சட்டங்களை மாற்றித் திருத்தி அமைப்பதும் அதன் தலையாய பண்பு நலன்களாகும். மலேசிய அரசர் நாட்டுத் தலைவராக இருந்தாலும், அவருக்குச் சார் நிலையான தகுதியில், மலேசிய அரசியலமைப்பின் 39-ஆவது விதிகளின்படி மலேசிய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை தான் மத்திய அரசின் நிருவாக அதிகாரத்தைக் கொண்டது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் அவருக்கு அதிகப் பெரும்பான்மை அதிகாரம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மலேசியப் பிரதமர்

Thumb
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை

மலேசியப் பிரதமரின் அடிப்படை அதிகாரம், அரசியல் கட்சிகளின் ஆதரவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வலுவான கட்சி ஒரு வலுவான ஆட்சிக்கு வழிவகுக்கும்.

மலேசிய அரசியலமைப்பின் படி, மலேசியாவில் உள்ள அதிகாரப் படிநிலைகள்; மூன்று கிளைகளாக உள்ளன. முதலாவது நிருவாக அதிகாரத் துறை (Executive); இரண்டாவது நீதித்துறை (Judiciary); மூன்றாவது சட்டம் இயற்றும் துறை (Legislative) எனும் கிளைகள்.

டேவான் நெகாரா

மலேசிய நாடாளுமன்றம்; மேலவை மற்றும் மக்களவை என அவைகளைக் கொண்டுள்ளது.[5]

70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில், மாநிலம் ஒவ்வொன்றிலும் இருந்தும் இருவராக 26 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். மேலும் 44 பேர் மன்னரால் நியமிக்கப் படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப் படுகின்றனர்.[6]

டேவான் ராக்யாட்

Thumb
கோலாலம்பூர் மாநகரில் பிலிப்பீன்சு தூதரகம்

மக்களவை (Dewan Rakyat) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஆகும். டேவான் என்றால் அவை. ராக்யாட் என்றால் மக்கள். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் மக்களவையில் விவாதிக்கப்பட்டு இயற்றப் படுகின்றன.

அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் சம்மதத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்கள் ஆகின்றன.

சட்ட விலக்களிப்பு

Thumb
கோலாலம்பூர் மாநகராட்சி கட்டடம்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவருக்கு நாடாளுமன்ற சட்ட விலக்களிப்பு (Parliamentary immunity) அதாவது நாடாளுமன்ற தடைக்காப்பு வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தன் கருத்துகளைச் சொல்வதில் முழு உரிமை வழங்கப்படுகிறது.

ஆனால், இனத் துவேச, அரசுப் பகையை மூட்டிவிடும் விசயங்களைப் பற்றி பேசுவதில் அல்லது எழுதுவதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.

13 மே இனக்கலவரம், பூமிபுத்ராகளின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மலேசியப் பேரரசரையும், நீதிபதிகளையும் குறை சொல்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.[7]

நாடாளுமன்ற வளாகம்

இரு அவைகளும் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகின்றன. கீழவையான மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப்படுகின்றன.

மக்களவை; மேலவை எனும் இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனாலும், சட்டமூலம் ஒன்று மேலவையினால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், அந்தச் சட்டமூலம் ஓராண்டுக்குப் பின்னரே மன்னருக்கு சமர்ப்பிக்கப்படும்.[5]

Remove ads

மேற்கோள்

மேலும் காண்க

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads