மல்காஜ்கிரி

தெலங்காணாவின் ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மல்காஜ்கிரி (Malkajgiri) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது மல்காஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள மல்காஜ்கிரி மண்டலத்தின் தலைமையகம் ஆகும். முந்தைய மல்காஜ்கிரி கிராமப் பேரூராட்சி, பின்னர் 1965ஆம் ஆண்டில் நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டில் அது மாநகராட்சியாக மாறியது. இது 2007ஆம் ஆண்டில் பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] இது மாநிலத்தில் மாவட்டங்களை மறுசீரமைப்பதற்கு முன்பு ரங்காரெட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது அது மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ளது.[3]

விரைவான உண்மைகள் மல்காஜ்கிரி, நாடு ...
Remove ads

புள்ளி விவரங்கள்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[4], மல்கஜ்கிரியின் மக்கள் தொகை 413,571 பேர் என்ற அளவில் இருந்தது. இதில் 51% ஆண்களும், 49% பெண்களும் அடங்குவர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 87% ஆகும். மொத்தம் 321,525 பேர் கல்வியறிவைக் கொண்டுள்ளனர். கல்வியறிவைப் பொறுத்தவரை, ரங்காரெட்டி மாவட்டத்தில் மல்கஜ்கிரி முதலிடத்தை பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்கள் கல்வியறிவு 72%, பெண் கல்வியறிவு 65% ஆகும். மல்கஜ்கிரியில், மக்கள் தொகையில் 7% 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads