மாதவரம் தாவரவியல் தோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதவரம் தாவரவியல் தோட்டம் (Madhavaram Botanical Garden) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில், சென்னை நகரில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும். இது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இது நகரத்தில் உள்ள பெரிய தாவரவியல் பூங்கா ஆகும். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய பூங்கா இதுவாகும்.[1]
Remove ads
வரலாறு
மாதவரம் தாவரவியல் தோட்டத்திற்கான அடிக்கல் 15 செப்டம்பர் 2010 அன்று நாட்டப்பட்டது.[2] ஆரம்பத்தில் 28.51 ஏக்கர் (11.54 ஹெக்டேர்) பரப்பளவில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்ட இப்பூங்காவின் பரப்பளவு[3] திறக்கப்பட்டபோது 20.21 ஏக்கராக (8.18 ஹெக்டேர்) குறைக்கப்பட்டது.[4] சுமார் 57.3 மில்லியன் செலவில் தாவரத் தோட்டம் கட்டப்பட்டது.[3]
தோட்டம்
மாதவரம் பால்பண்ணைக் காலனியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இந்த தோட்டம் உள்ளது. தோட்டம் பரவலாகப் பழங்கள், மருத்துவ தாவரங்கள், உட்புற தாவரங்கள், கற்றாழை மற்றும் அலங்கார மரக்கன்றுகள், பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்காக ஒரு பிரிவு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.[4] பூங்காவில் பறவைகளைக் கவரும் வகையில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்வையாளர்கள் ஏரியைக் காண முடியும். இத்தோட்டத்தில் ஏறக்குறைய 400 வகையான தாவரங்கள் உள்ளன.[3] இதில் 200 அலங்காரச் செடி வகைகளும் அடங்கும்.[4] உதகமண்டலத்தில் உள்ள தோட்டத்தில் உள்ளதைப் போன்ற கண்ணாடி மாளிகையும், மூலிகைகள், மலர்கள், போன்சாய் மற்றும் குறுக்கு நெடுக்காக அமைக்கப்பட்ட தட்டி தோட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, அருவிகள் மற்றும் பல நீரூற்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தோட்டங்களுடன் அமைந்துள்ளது. தோட்டத்தில் கிட்டத்தட்ட 150 பேர் அமரக்கூடிய ஒரு திறந்தவெளி அரங்கம் உள்ளது. தோட்டத்தில் தாவர நாற்றங்கால் விற்பனை நிலையமொன்றும் செயல்படுகிறது.[3] இந்து பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களைக் கொண்டு தோட்டம் ஒன்று உருவாக்கும் திட்டமும் உள்ளது.[4]
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவரத்தில் உள்ள தோட்டக்கலை பயிற்சி மையமும் ரூபாய் 39 மில்லியன் செலவில் தோட்டக்கலை மேலாண்மை நிறுவனமாகத் தரம் உயர்த்தப்படும்.[2]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
