மாதவரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதவரம் (ஆங்கிலம்:Madavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமை இடமாகும்.[4]

முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த நகராட்சி ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் நகராட்சியை சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[5]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13.15°N 80.24°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 76,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மாதவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதவரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads