மார்ட்டின் லூதர் கிங் நினைவகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (Martin Luther King, Jr. Memorial) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாஷிங்டன் நகரில், மேற்கு போட்டமாக் பூங்காவில் தேசிய விரிசாலை என்றழைக்கப்படுகின்ற பேரெல்லைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவு நிறுவனம் ஆகும். [1]

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...

இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பூங்காக்கள் அமைப்பின் 395ஆம் செயல்திட்டம் ஆகும்.[2]

Remove ads

அமைவிடம்

இந்த நினைவகம் வாஷிங்டன் நகரில், டைடல் பேசின் என்றழைக்கப்படும் ஏரிக்கரையின் வடகிழக்குப் பகுதில், பிராங்ளின் டேலனோ ரூசவெல்ட் நினைவகத்தின் அருகின் உள்ளது. அதிலிருந்து நோக்கினால் வடமேற்குப் பகுதில் லிங்கன் நினைவகமும், தென்கிழக்குப் பகுதியில் ஜெபர்சன் நினைவகமும் அமைந்துள்ளதைக் கண்டு இன்புறலாம்.

மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்துள்ள முகவரி 1964 இண்டிப்பெண்டன்சு சாலை என்பதாகும். 1963இல் டாக்டர் கிங் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் குடிமைசார் உரிமைகளுக்கான மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாகிய 1964ஐ முகவரியாக வைத்துள்ளார்கள். [3]

Remove ads

நினைவக நிலப்பகுதி

மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்திருக்கும் பூங்கா நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் தயாரிப்புக் காலத்திற்குப் பின்னரே இந்த நினைவகம் கட்டி எழுப்பப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு 2011ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது.[4][5]

மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரை

1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் நாள், லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டின் மேல் நின்றுகொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மார்ட்டின் லூதர் கிங் "கனவொன்று கண்டேன்" (I Have a Dream) என்னும் புகழ்மிற்ற உரையை ஆற்றினார். அந்த உரையின் 48ஆம் ஆண்டு நினைவான 2011, ஆகத்து 22ஆம் நாள் அன்று அந்நினைவகத்தைத் திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.[6] ஆனால் அப்போது சுழற்காற்று ஐரீன் பெரும் சேதம் விளைவித்ததால் நினைவகத் திறப்பு விழா அக்டோபர் 16ஆம் நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆதரவாக 1995 அக்டோபர் 16ஆம் நாள் நடந்த "பத்து இலட்சம் மனிதர் உர்வலம்" (Million Man March) என்னும் நிகழ்ச்சியின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் அது. அந்த நாளில் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது.[7][8][9]

மார்ட்டின் லூதர் கிங் வரலாறு

Thumb
1963, ஆகத்து 22ஆம் நாளன்று, ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்ட, "கனவொன்று கண்டேன்" என்னும் சிறப்புமிகு உரையை மார்ட்டின் லூதர் கிங் ஆற்றினார்.
Thumb
மார்ட்டின் லூதர் கிங் நினைவகத் திறப்புவிழாவின் போது நடந்த இசை நிகழ்ச்சி
Thumb
மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தைத் திறந்துவைத்து, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் அதிபர் ஒபாமா ஆற்றிய உரையைக் கேட்கின்ற மனிதர் கூட்டம்
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads