மாஸ்கோ முற்றுகை (1238)
மங்கோலியர்களின் மாஸ்கோ முற்றுகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாஸ்கோ முற்றுகை (Siege of Moscow (1238)) என்பது 1238ஆம் ஆண்டு நடந்த ஒரு முற்றுகைப் போராகும். இது மங்கோலியர்களின் கீவ ருஸ் மீதான படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
Remove ads
பின்புலம்
திசம்பர் 21, 1237ஆம் ஆண்டு ரியாசானின் அழிவிற்குப்பிறகு மாட்சிமிக்க இளவரசரான இரண்டாம் ஊரி தனது மகன்கள் விசேவோலோடு மற்றும் விளாதிமிரைப் பெரும்பாலான விளாதிமிர்-சுஸ்டாலின் இராணுவத்துடன் சேர்த்து மங்கோலியப் படையெடுப்பாளர்களை கோலோம்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்த அனுப்பினார். இங்கு, உருசிய இராணுவமானது தோற்கடிக்கப்பட்டது. தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிதறி வடக்கு நோக்கி ஓட ஆரம்பித்தனர். அவர்கள் விளாதிமிர் மற்றும் மாஸ்கோவை அடைந்தனர்.
Remove ads
முற்றுகை
சனவரி 1238இல் கோலோம்னாவின் அழிவிற்குப் பிறகு விளாதிமிரின் இரண்டாம் ஊரியின் இளைய மகனான இளவரசர் விளாதிமிர் மாஸ்கோவுக்குத் தன்னுடைய எஞ்சிய சிறிய படையுடன் தப்பி ஓடினார்.[1] நோவ்கோரோடு வரலாற்று நூலில், "மாஸ்கோவின் வீரர்கள் எதையும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு ஓடி தப்பினர்"[2] என்று இதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நேரத்தில் மாஸ்கோவானது அரண்களைக் கொண்ட ஒரு கிராமமாக இருந்தது. "நான்கு ஆறுகள் சந்தித்த இடத்தில்" ஒரு வணிக பணியிடமாகத் திகழ்ந்தது. [3]ஐந்து நாட்கள் முற்றுகைக்குப் பிறகு மாஸ்கோவின் சிறிய மரக் கோட்டையானது கைப்பற்றப்பட்டது.
Remove ads
பிறகு
இளவரசர் விளாதிமிர் பிடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விளாதிமிர் தற்காப்பாளர்களின் கண் முன்னால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[4]
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
